வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? – Allmaa

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு? – Allmaa

  செய்திகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு?

News oi-Devika Manivannan By Published: Monday, December 1, 2025, 14:36 [IST] Share This Article

நடிகை சமந்தா திரைப்பட இயக்குநர் மற்றும் கதாசிரியரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது .

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே உற்று நோக்கிய இந்த திருமணம் இறுதியில் விவாகரத்தில் முடிந்தது. நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர் .

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு?

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கினார். சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இதற்கிடையே சமந்தா மையோடிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார். படங்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும் ஓடிடி ரிலீஸ்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமந்தா, பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அவ்வப்போது சமந்தாவும் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் படங்களை சமூகவலை தள பக்கங்களில் வெளியிட்டு வந்தார். இந்த சூழலில் தான் இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் திருமணம் பந்தத்தில் நடிகை சமந்தா!! யார் இந்த ராஜ் நிடிமொரு?

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ரகசியமான முறையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றதாகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் சமந்தா மற்றும் ராஜ் திருமண புகைப்படங்கள் வெளீயாகியுள்ளன.சிவப்பு நிற புடவை அணிந்து மணமகளாக சம்ந்தா இருக்கும் படங்கள் வெளிவந்துள்ளன.

Also Readமுடங்க போகும் வாட்ஸ் அப் கணக்குகள்? அரசு அதிரடி!! இது இல்லனா வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிப்பு!!முடங்க போகும் வாட்ஸ் அப் கணக்குகள்? அரசு அதிரடி!! இது இல்லனா வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிப்பு!!

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சமந்தாவை பொறுத்தவரை 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நபர் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கூறுகிறது. படங்களில் சராசரியாக ஒரு படத்திற்கு 5 முதல் 8 கோடி ரூபாயும் விளம்பரங்களில் நடிக்க 8 கோடி ரூபாயும் சம்பளமாக பெறுகிறார் என சொல்லப்படுகிறது.

சமந்தா மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆடம்பர குடியிருப்புகளை வைத்திருக்கிறார். பிஎம் டபிள்யூ, போர்சே, ரேஞ்ச் ரோவர், ஆடி, ஜாக்குவார் உள்ளிட்ட பல ஆடம்பர கார்களையும் வாங்கு குவித்து வைத்திருக்கிறார்.

சமந்தா திருமணம் செய்திருக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். ஆந்திர மாநில திருப்பதியில் பிறந்தவர் தான் ராஜ் நிடிமோரு. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த ராஜ், பின்னர் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கே கிருஷ்ணா டிகே-வை சந்தித்தார். பின்பு இருவரும் இணைந்து திரைத்துறையில் கால் பதித்தனர்.

Recommended For Youபெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

இவ்விருவரும் பிரபலமாக ராஜ் -டிகே என அறியப்படுகின்றனர். டார்க் ஹியூமர், திரில்லர் உள்ளிட்ட படங்களை இயக்குவதில் இருவரும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். The Family Man, Guns and Gulaabs, Stree, Shor In The City, Go Goa Gone ஆகியவை இவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த படங்கள்.

The Family Man தொடரில் நாயகியாக சமந்தா நடித்தார். அப்போது தான் சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி இருக்கிறது. ராஜ் நிடிமோரு 85 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் என நியூஸ் நைன் செய்தி கூறுகிறது.

Share This Article English summary

Samantha Ruth Prabhu weds Raj Nidimoru in coimbatore: Who is Raj Nidimoru?

Samantha Ruth Prabhu and filmmaker Raj Nidimoru were reported to have tied the knot in a private ceremony in Coimbatore. Story first published: Monday, December 1, 2025, 14:36 [IST] Other articles published on Dec 1, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *