தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? – Allmaa

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா? – Allmaa

  செய்திகள்

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா?

News oi-Devika Manivannan By Published: Monday, December 1, 2025, 13:52 [IST] Share This Article

டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்வு கண்டிருக்கிறது. சில்லறை வர்த்தகத்திலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பியுள்ளன.

சென்னையை பொருத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,000 ரூபாயை கடந்து விட்டது. ஒரு சவரன் 97,000 ரூபாயை நெருங்கிவிட்டது . 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது .

தாறுமாறாக உயரும் தங்கம், வெள்ளி விலை!! வருட கடைசியில் ஒரு ஆட்டம் இருக்கிறதா?

வெள்ளியை பார்க்கும்போது ஒரே நாளில் தடாலடியாக கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 200 ரூபாய் நோக்கி படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்வு கண்டுள்ளது.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வாரத்தின் மற்றும் மாதத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் தான் தங்கமும் வெள்ளியும் வர்த்தகமாகின்றன. காலையில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,30, 383 ரூபாய் என வர்த்தகமானது. அதே போல வெள்ளி விலை ஒரு கிலோ 1,78,620 ரூபாய் என வர்த்தகத்தை தொடங்கியது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இப்படி உச்சத்தில் வர்த்தகமாவது இந்த மாதம் முழுவதும் இதேபோல் தான் விலை நீடிக்குமா என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,252 டாலர்கள் என வர்த்தகம் ஆகிறது. வெள்ளியின் விலை 57 டாலர்கள் என வர்த்தகம் செய்யப்படுகிறது . இன்றைய தினத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே விலை உயர்வு கண்டிருக்கிறது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி பார்த்தால் அமெரிக்க சந்தையில் வெள்ளி விலை 57.59 டாலர்கள் என தன்னுடைய வரலாற்றை உச்சத்தை தொட்டிருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வு இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன . குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து இருப்பது ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

Recommended For You10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?

இந்த மாதம் முழுவதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும் என சந்தை நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர் . டாலர் இன்டெக்ஸ், சர்வதேச பங்குச்சந்தை நிலவரம் , அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை பொறுத்து தங்கம் , வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்களை காண முடியும் என பிரித்வி பின்மார்க் கமாடிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின் தெரிவிக்கிறார்.

Share This Article English summary

Gold and silver futures sees strong rally in MCX market: will it continue this December?

Gold and silver futures opened strongly on Monday market: weaker dollar, anticipated U.S. Federal Reserve rate cuts, and a depreciating rupee fueled this rally. Story first published: Monday, December 1, 2025, 13:52 [IST] Other articles published on Dec 1, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *