Breaking: பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

Breaking: பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

  செய்திகள்

பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

News oi-Devika Manivannan By Published: Monday, December 1, 2025, 11:11 [IST] Share This Article

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்காவில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் என பல முன்னணி நிறுவனங்களை நடத்துகிறார். உலகின் இளம் தொழில் முனைவோருக்கு எல்லாம் இவர் ஒரு முன்னோடி. படிப்படியாக தன்னுடைய திறமைகள் மூலம் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி சாதித்து காட்டியவர்.

எலான் மஸ்க், ஸெரோதா நிறுவனர் நிகில் காமத்தின் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் விஷயமாக இருக்கிறது. இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.

பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசா விவகாரத்தில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்த வண்ணம் இருக்கிறது டிரம்ப் நிர்வாகம். இந்த விசாவை பயன்படுத்துவோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். இந்நிலையில் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் இது குறித்த கேள்விக்கு எலான் மஸ்க் அளித்திருக்கும் பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய இந்தியர்களால் தான் அமெரிக்கா பெருமளவில் பயனடைந்து இருக்கிறது என எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் . ஹெச்1பி விசா விநியோகத்தில் சில தவறுகள் , முறைகேடுகள் நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன் ஆனால் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இல்லை என கூறியுள்ளார்.

பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? – இதை செஞ்சா போதும்..! உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் பதில்..!

அமெரிக்காவில் திறமையானவர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை இருக்கிறது என கூறிய எலான் மஸ்க் இன்னும் திறமையானவர்கள் இருந்தால் நல்லது என தெரிவித்திருக்கிறார். ஹெச்1பி விசா நிச்சயம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஹெச்1பி விசாவுக்கு ஆதரவாக அமெரிக்க நம்பர் ஒன் தொழிலதிபர் பேசி இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது .

Also Readலாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள்லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள்

மேலும் தற்போதுள்ள இந்தியாவை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதிலும் மிகப்பெரிய ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் செல்வத்தை பெருக்க வேண்டும் பெரும் பணக்காரராக வேண்டுமென்ற நோக்கத்தில் தொழிலில் இறங்காமல், மக்களுக்கு மதிப்பு கொண்ட பொருட்களையும் மதிப்பு கொண்ட தயாரிப்புகளையும் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சேவைகளையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை முன்னுரிமையாக கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

Recommended For You2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!2026-இல் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? முன்னணி வங்கிகள் வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

நீங்கள் கொடுக்கக்கூடிய சேவையோ அல்லது பொருளோ மக்களுக்கு உண்மையான வேல்யூ கொடுக்க கூடியதாக இருந்தால் பணம் தானாக உங்களைத் தேடி வரும் எனக் கூறியிருக்கிறார் . மேலும் உண்மையான வெற்றி என்பது உங்களுக்கு வரக்கூடிய பணத்தில் கணிசமான தொகையை இந்த சமூகத்திற்காக நீங்கள் மீண்டும் திரும்ப பங்களிப்பு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். இந்த சமூகம் உங்களுக்கு எவ்வளவு கொடுக்குறதோ அதே அளவுக்கு நீங்கள் மறுபடியும் இந்த சமூகத்திற்கும் பங்களிப்பு செய்யுங்கள் என அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

Share This Article English summary

Elon Musk’s Mantra for Entrepreneurs: Focus on Creating Value, Not Just Money

Elon Musk, in a recent podcast with Indian entrepreneur Nikhil Kamath, advised Indian entrepreneurs to focus on creating useful products and services rather than directly pursuing financial gains. Story first published: Monday, December 1, 2025, 11:11 [IST] Other articles published on Dec 1, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *