டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!! – Allmaa

டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!! – Allmaa

  செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!!

News oi-Devika Manivannan By Published: Monday, December 1, 2025, 9:00 [IST] Share This Article

இந்தியாவில் தற்போது வீடுகளிலும், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றிலும் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகிறோம். இந்த கேஸ் சிலிண்டரை எண்ணெய் நிறுவனங்கள் தான் நமக்கு விநியோகம் செய்கின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர்கள் விலையை மாற்றி கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை அறிவிக்கும். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும்.

டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!!

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் தொடங்கியிருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் மாதம்தோறும் முதல் தேதியில் மாற்றத்தை கொண்டு வரும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப விலையை குறைக்கும் அல்லது உயர்த்தும் அல்லது மாற்றமில்லை என அறிவிக்கும்.

Also Readபான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

இன்றைய தினம் சிலிண்டரின் விலையில் என்ன மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 868.50 ரூபாய்க்கும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடைகளில் பயன்படுத்தப்படக்கூடிய 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. 1750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இனி 1739 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். இதேபோல மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா ,மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் குறைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended For Youதொடர்ந்து உயரும் தங்கம் விலை!! மாத்தி யோசிக்கும் மக்கள்!! நகை கடைகள் வெளியிடும் ஷாக் ரிப்போர்ட்!!தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! மாத்தி யோசிக்கும் மக்கள்!! நகை கடைகள் வெளியிடும் ஷாக் ரிப்போர்ட்!!

அதே சமயம் வீட்டில் பயன்படுத்தப்பட கூடிய சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது வரை எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் 868 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டரின் விலை உயராமல் இருப்பதே சாமானிய மக்களுக்கு நல்ல விஷயம் தான் .

Share This Article English summary

Prices for 14.2 kg domestic LPG cylinders remain unchanged in Chennai

Oil marketing companies reduced prices of 19 kg commercial LPG cylinders by Rs 10.50 December 1, 2025, in Chennai (Rs 1,739.50). Prices for 14.2 kg domestic LPG cylinders remain unchanged. Story first published: Monday, December 1, 2025, 9:00 [IST] Other articles published on Dec 1, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *