லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள்
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 12:45 [IST] Share This Article
அண்மையில் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 14,000 பேரை வேலை இருந்து நீக்குவதாக அறிவித்தது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜெஸி, அமேசான் நிறுவனத்தின் எதிர்காலத்தின் மையமாக ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் தான் இருக்கப் போகிறது என்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏஐ ஏஜென்ட்கள் மூலம் சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருங்காலத்தில் பல்வேறு பதவிகள் நீக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்புகளை இழப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இது அமேசான் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வரக்கூடிய பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுடைய வேலைக்கு உத்தரவாதம் இல்லை என அனைவரும் உணர தொடங்கிவிட்டனர். அமேசான் நிறுவனம் மிக தீவிரமாக ஏஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டது. இந்த சூழலில் அமேசான் நிறுவன ஊழியர்கள் அமேசான் தலைமை செயல் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கின்றனர். இந்த கடிதம் தான் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது .
கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில் ஏஐ என்ற பெயரை கூறி அமேசான் நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைகளை கடுமையாக சாடி இருக்கின்றனர் . அமேசானில் வேலை செய்யும் 1039 ஊழியர்கள் அமேசானுக்கு வெளியே இருக்கக்கூடிய 2434 பேர் என 3000க்கும் அதிகமானவர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.
அமேசானில் வேலை செய்யும் மூத்த பொறியாளர்கள் , மேலாளர்கள் , விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் , லாஜிஸ்டிக் பணியாளர்கள் , மார்க்கெட்டிங் நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்தமாக இந்த கடிதத்தை அனுப்பி இருக்கின்றனர் . அதில் ஏஐ தொழில்நுட்பத்தை மிக வேகமாக அமேசான் நிறுவனம் அமல்படுத்துகிறது அமேசான் நிறுவனம் அறநெறிகளைக் கடந்து மனித நலனை பின்னுக்குத் தள்ளி பூமியின் நீடித்த நிலை தன்மையை பற்றி கவலைப்படாமல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
ஈ-காமர்ஸை தொடர்ந்து லாபம் கொட்டும் புதிய பிரிவில் கால் பதிக்கும் Amazon, Flipkart!!
மனிதர் நலனையும் பூமியின் நலனையும் கவனத்தில் கொள்ளாமல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சரியல்ல என அதில் கூறியிருக்கின்றனர். அமேசான் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்ப அமல்படுத்தும் முறை காலநிலை சீர்குலவை துரிதப்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் நெறிமுறைகளை கையாள வேண்டும் , அதற்கு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இல்லாத ஊழியர்கள் உள்ளடக்கிய நெறிமுறை குழுவை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏஐ எப்படி தொழிலாளர்களின் பணி நிலைமைகளை பாதிக்கின்றன என்பது குறித்து வெளிப்படைதன்மை வேண்டும் என அவர்கள் கோரி இருக்கின்றனர்.
Recommended For You
தொடர்ந்து உயரும் தங்கம் விலை!! மாத்தி யோசிக்கும் மக்கள்!! நகை கடைகள் வெளியிடும் ஷாக் ரிப்போர்ட்!!
மேலும் டேட்டா சென்டர் விரிவாக்கம் மூலம் அமேசான் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டிலிருந்து அமேசான் நிறுவனத்தின் ஆண்டு கரியமில வாயு வெளியீட்டு அளவு 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது . 2040க்குள் காரியமிலவாயு வெளியிட்டை பூஜ்ஜியமாக்குவோம் என கூறிவிட்டு இப்படி அதனை அதிகரித்து இருப்பது நியாயமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து அமேசான் நிறுவனம் விலகி நிற்கிறது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறது என சாடியுள்ளனர்.
Share This Article English summary
Amazon layoff: employees warns company’s rush into AI risks harm to planet
More than 1,000 Amazon employees have signed an internal open letter expressing serious concerns about the company’s rapid and aggressive push into artificial intelligence. Story first published: Saturday, November 29, 2025, 12:45 [IST] Other articles published on Nov 29, 2025