டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!!  கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள்

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

News oi-Devika Manivannan By Published: Saturday, November 29, 2025, 10:20 [IST] Share This Article

சென்னை: சென்னையில் தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் இந்த ஒரு வாரத்தில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ஆபரண தங்கம் 1 கிராம் தங்கம் 11,900 ரூபாய் என்று உச்சத்தை எட்டியது. அதன் பிறகு படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது.

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!

இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து ஒரு சவரன் 96 ,000 ரூபாயை நெருங்கி விட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 140 ரூபாய் விலை உயர்வு கண்டு ஒரு கிராம் 11,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கம் 1120 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 94,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம்,இன்று 95 ,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்க ஊரில் இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?

நவம்பர் 1ஆம் தேதி அன்று 11,310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 11, 980 ரூபாய் என விலை உயர்ந்திருக்கிறது. நவம்பர் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 670 ரூபாயும், ஒரு சவரனுக்கு 5,360 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 153 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது . நேற்று 12,916 ரூபாய்க்கு விற்பனையாளர் தங்கம் இன்று கிராமுக்கு 13,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 1824 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. 1,03,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 1,04, 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து 9,995 ரூபாய்க்கும், ஒரு சவரன் 960 ரூபாய் உயர்ந்து 79,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?

வெள்ளி விலையும் இன்று தடாலடியாக கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 183 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 9 ரூபாய் உயர்ந்து 192 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 9,000 ரூபாய் விலை உயர்ந்து 1,92,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 166 ரூபாயாக இருந்தது இந்த 29 நாட்களில் கிராமுக்கு 26 ரூபாயும் கிலோவுக்கு 26,000 ரூபாயும் உயர்ந்துள்ளது.

Share This Article English summary

Gold and silver rate sees sudden spike in Chennai: here are the details

Gold and silver rate sees sudden spike as the 24k gold rate one gram has crossed 13,000rs milestone and 22k gold rate one sovereign is approaching the 96,000 Rs mark. Story first published: Saturday, November 29, 2025, 10:20 [IST] Other articles published on Nov 29, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *