பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன?
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article
சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்திருக்கிறார் .
தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் 9 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவர். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் திடீரென தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட ஏராளமானோர் அவரோடு சேர்ந்து தவெக-வில் இணைந்து இருக்கின்றனர் . தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்திருப்பது குறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் விஜய், இளம் வயதிலேயே எம்எல்ஏவாக தேர்வானவர் செங்கோட்டையன் என்றும் அதிமுகவின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் என்றும் புகழாரம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இதுதான் இருக்கிறது. 50 ஆண்டுகாலம் ஒரே இயக்கத்தில் இருந்த செங்கோட்டையன் தன்னுடைய அரசியல் பயணத்தை தவெக பக்கம் திருப்பி இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது செங்கோட்டையன் வெளியிட்ட பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெளிவாக இடம் பெற்றிருக்கின்றன. இதன்படி செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் . 73 வயதான இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்து இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 12.39 கோடி ரூபாய் என தெரிவித்திருக்கிறார் . இது தவிர இவருக்கு 90 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.
Also Read
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!!
2020- 21ஆம் நிதியாண்டில் தனக்கு 17 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாக அவர் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார். தன்னுடைய மனைவிக்கும் 8 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தன்னிடம் வங்கி டெபாசிட்டாக 1.81 கோடி ரூபாய் இருப்பதாகவும் ,பத்திரங்கள் மற்றும் நிறுவனங்களில் பங்குகளாக 40 லட்சம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனக்கு சொந்தமாக ஒரு அம்பாசிடர் கார், ஃபோர்டு டிராக்டர் , ஸ்கார்பியோ கார் , இன்னோவா கார் உள்ளிட்டவை இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர் அவற்றின் மதிப்பு 42 லட்சம் என தெரிவித்துள்ளார். 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட நகைகளை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மொத்தமாக 6.74 கோடிக்கு அசையும் சொத்துக்களை வைத்திருக்கிறார்.
Recommended For You
உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!!
அசையா சொத்துக்கள் என பார்க்கும்போது 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாய நிலத்தை வைத்திருக்கிறார் இது தவிர 71 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டு கட்டிடங்களை சொந்தமாக வைத்திருப்பார் .அந்த வகையில் அசையா சொத்துக்கள் 5.64 கோடி ரூபாய் வரை வைத்திருக்கிறார் . தனக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மொத்தமாக 90 லட்சம் கடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Share This Article English summary
Former AIADMK minister Sengottaiyan joins vijay’s TVK, here are his net worth
Former AIADMK minister and nine-time MLA K.A. Sengottaiyan on Thursday joined the Tamizhaga Vetri Kazhagam (TVK), led by actor Vijay. He was expelled from the AIADMK recently. Story first published: Thursday, November 27, 2025, 14:01 [IST]