தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்?
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article
சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென இப்படி முட்டை விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புரதச்சத்துக்கு உணவில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் முட்டை உண்ணும் பழக்கமும் உயர்ந்துள்ளது. ஆனால் திடீரென முட்டையின் விலை இப்படி உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் இந்தியாவின் முட்டை தலைநகரம், எனவே இங்கே நிர்ணயம் செய்யப்படும் விலை மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10 என்றால் அதனை கொண்டு வருவதற்கான செலவு, வியாபாரிகளுக்கு கமிஷன் என சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்த மாநிலம் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் முட்டை விலைக்கான பெஞ்ச்மார்க்காக நாமக்கல் விலை தான் பின்பற்றப்படுகிறது. நாமக்கலில் ஒரு நாளைக்கு 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 10 சதவீதத்திற்கும் மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன . இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 80% முட்டை நாமக்கலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாமக்கலில் இருந்து தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் அருகிலேயே இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரத்திலும் இந்தியாவின் ஏற்றுமதியிலும் முக்கிய பங்காற்றுகிறது முட்டை உற்பத்தி.
உலக அளவில் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா . ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் 14,200 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறது ஃபின்ஷாட்ஸ் தகவல். இதில் முன்னணியில் இருக்கிறது நாமக்கல். இதனால் தான் இந்தியாவின் முட்டை தலைநகரம் என நாமக்கலை அழைக்கிறார்கள் . தங்கத்தை போலவே முட்டையின் விலையை நிர்ணயம் செய்யவும் அமைப்பு இருக்கிறது. இப்படி முட்டைக்கான விலை நிர்ணயம் எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Also Read
தூத்துக்குடியை தேடி வந்து முதலீடு செய்யும் நிறுவனங்கள்!! இளைஞர்களே ரெஸ்யூம் ரெடியா?
நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு செயல்படுகிறது .இது அரசு சாராத விவசாயிகளால் செயல்படுத்தக்கூடிய கூட்டுறவு துறை போன்ற ஒரு அமைப்பு . இந்தியாவில் 1970, 1980களில் எல்லாம் முட்டை விலையை வர்த்தகர்கள் தான் நிர்ணயம் செய்தார்கள். அவர்கள் நினைத்தால் முட்டை விலையை உயர்த்துவார்கள், நினைத்தால் விலையை குறைப்பார்கள். இதனால் கோழிப்பண்ணை நடத்தி வந்த விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர்.
எனவே இந்த தொழில் இருக்க கூடிய விவசாயிகளுக்கு இதன் மூலம் எந்த லாபமும் கிடைக்கவில்லை, மாறாக வர்த்தகர்கள் தான் இதில் லாபம் பார்த்து வந்தனர். இதனை மாற்றி அமைக்க தான் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டது. ஒரு நிலையான விலை நிர்ணயம் இல்லாததால் முதல் 1979 முதல் 1981 வரையிலான இரண்டு ஆண்டுகளில் கோழி வளர்ப்புக்கான செலவினம் அதிகரித்தது ஆனால் முட்டை விலை உயரவில்லை இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோழி பண்ணைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அந்த சமயத்தில் தான் வெங்கடேஸ்வரா ஹர்சரி நிறுவனர் பி.வி. ராவ் நாடு முழுவதும் பயணம் செய்து அனைத்து கோழிப்பண்ணை விவசாயிகளையும் ஒருங்கிணைத்தார். அவருடைய இந்த முயற்சி தான் இந்த துறை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக மாறுவதற்கு காரணமாக அமைந்தது அவர் எடுத்த முயற்சியின் விளைவாக தான் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பு முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக முட்டை விலையை அறிவிக்க தொடங்கியது. அன்று முதல் இன்று வரை இந்த அமைப்புதான் முட்டைக்கான விலையை நிர்ணயம் செய்கிறது .
வர்த்தகர்கள் அந்த விலையில் தான் முட்டையை வாங்கிச் செல்ல முடியும். இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பையும், விலை சீராக இருப்பதையும் உறுதி செய்கிறது. ஆனால் இப்படி விலை நிர்ணயம் செய்தாலும் பெரும்பாலான மக்கள் முட்ட்டை வாங்கி உண்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவில்லை . எனவே இந்த அமைப்பு முட்டையின் ஊட்டச்சத்துக்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்போது பெருமளவில் மக்கள் அவற்றை உண்ண தொடங்கி இருக்கின்றனர்.
Recommended For You
1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
தற்போது திடீரென முட்டை விலை உயர்ந்திருப்பதற்கு பருவமழை காரணமாக சொல்லப்படுகிறது. தொடர்மழை, தீவனங்கள் வரத்து குறைத்தது ஆகியவை உற்பத்தியை பாதித்துள்ளன,, தற்போது 10 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்லது, ஆனால் முட்டைக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது . குளிர்காலம் என்றாலே முட்டை உண்ணும் பழக்கம் அதிகரிக்கும், மேலும் கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு முட்டை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருகை ஆகியவை டிமாண்டை உயர்த்தி முட்டை விலையையும் உயர செய்துள்ளன.
Share This Article Story first published: Thursday, November 27, 2025, 12:39 [IST]