தூத்துக்குடியை தேடி வந்து முதலீடு செய்யும் நிறுவனங்கள்!! இளைஞர்களே ரெஸ்யூம் ரெடியா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 16:46 [IST] Share This Article
தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களின் விருப்பமான முதலீட்டு மையமாக சென்னை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்னை விமான நிலைய போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த போக்குவரத்து என ஏற்றுமதி இறக்குமதிக்கான அனைத்து சாதகங்களையும் கொண்டு இருக்கிறது.
சென்னை போன்ற ஒரு வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும், முதலீடுகளும் கடல் சார்ந்த இருக்கக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்திலும் உருவாக வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது . தூத்துக்குடியை மிக சிறந்த உற்பத்தி மையமாக அரசு நிலை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் தான் தமிழ்நாடு அரசின் முயற்சியால் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவியது.

இந்த நிறுவனம் இந்தியாவில் தன் முதல் கார் உற்பத்தி ஆலையை தூத்துக்குடியில் தான் அமைத்துள்ளது. வெற்றிகரமாக ஆலை செயல்பாட்டுக்கும் வந்துவிட்டது. துறைமுகம் இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதிக்கு பொருத்தமான இடமாக இருக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் கால் பதிக்கவும் தூத்துக்குடி உற்பத்தி ஆலையை முக்கியமான மையமாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கொண்டிருக்கிறது .
இதனை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் தூத்துக்குடியை நோக்கி வர தொடங்கியுள்ளன. அரசும் தூத்துக்குடியை மையமாக கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல் தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர் மாநாடும் தூத்துக்குடியில் தான் நடத்தப்பட்டது.
Also Read
ஓசூர், தூத்துக்குடி போல இல்லை ‘கோயம்புத்தூர்’.. நாங்கெல்லாம் வேற ரகம் பாஸ்..!!
தூத்துக்குடி மாவட்ட மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் முதலீடுகளை குவித்தன. இந்நிலையில் புதிதாக ஒரு நிறுவனம் தூத்துக்குடி நோக்கி வந்திருக்கிறது. சீனாவை சேர்ந்த SVOLT Energy Tech நிறுவனம் தூத்துக்குடியில் ஆலை அமைக்க உள்ளது.
தி கிரேட் வால் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேட்டரி தயாரிப்பு நிறுவனம்தான் SVOLT Energy Tech நிறுவனம். சீனாவை தலைமை இடமாகக் கொண்ட இந்த நிறுவனம் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலும் கால் பதித்திருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் தன்னுடைய பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Recommended For You
சென்னையில் H1B விசா மோசடியா? ஒரே ஆண்டில் 2.2 லட்சம் விசா வழங்கப்பட்டது எப்படி?
250 கோடி ரூபாயை இதற்காக இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. தூத்துக்குடியில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது. வின்ஃபாஸ்ட், ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் பேட்டரி விநியோகம் செய்கிறது. இந்த புதிய ஆலை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பிரகாசமாக்கி இருக்கிறது.
Share This Article English summary
China based SVOLT to invest 250 Crs in Thoothukudi for manufacturing batteries
China based SVOLT Energy Tech, a subsidiary of Great Wall Motors will invest 250 Crs in Thoothukudi for manufacturing batteries. Story first published: Wednesday, November 26, 2025, 16:46 [IST] Other articles published on Nov 26, 2025
