மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

  செய்திகள்

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Share This Article

நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அண்மைக்காலமாக ஊழியர்களை சரியான முறையில் நடத்துவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .

கடந்த ஜூலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது தொடங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் பணிநீக்கம் என ஒரு எண்ணிக்கையை அறிவித்துவிட்டு மற்ற ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்படுகிறது.

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

பல்வேறு ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் தங்களை மோசமான முறையில் நடத்தி வேலையிலிருந்து நீக்குவதாகவும் கட்டாய ராஜினாமா செய்ய வைப்பதாகவும் ஊழியர்கள் சாடுகின்றனர். இது தொடர்பாக ஐடி ஊழியர்களுக்கான யூனியனும் அந்தந்த மாநில தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார்களையும் அளித்திருக்கிறது. அண்மையில் கூட புனே தொழிலாளர்கள் ஆணையம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் புதிதாக ஒரு புகாரை முன் வைத்திருக்கின்றனர். அதாவது டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு திடீரென internal assessment நடத்தி அதனை அடிப்படையாக கொண்டு கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என புகார் எழுந்துள்ளது. நீண்ட காலம் நிறுவனத்திற்காக வேலை செய்பவர்கள் மட்டுமில்லாமல் ஃபிரஷர்களாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களையும் இப்படி குறி வைத்து ராஜினாமா செய்ய வைக்கிறார்களாம்.

Also Readஅமேசான், ஆப்பிளை தொடர்ந்து HP நிறுவனத்திலும் பணிநீக்கம்..! எல்லாம் AI படுத்தும் பாடு!!அமேசான், ஆப்பிளை தொடர்ந்து HP நிறுவனத்திலும் பணிநீக்கம்..! எல்லாம் AI படுத்தும் பாடு!!

ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பான FITE தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வழக்கமாக இன்டர்நெல் தேர்வு ஊழியர்களின் பணித்திறனை மதிப்பிடுவதற்காக தான் நடத்தப்படும் ஆனால் டிசிஎஸ் நிறுவனம் அந்த இன்டெர்னல் தேர்வை வைத்து ஒரு ஊழியரை வேலையில் வைத்திருக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய பயன்படுத்துகிறது என கூறி இருக்கின்றனர்.

குறைவான மதிப்பெண் பெறக்கூடிய ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலையில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கிறதாம். புதிதாக வேலைக்கு சேர்ந்த பிரஷர்களில் தொடங்கி இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் முதல் நீண்ட ஆண்டுகள் நிறுவனத்திற்காக உழைத்தவர்களையும் இது போல டார்கெட் செய்து டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Recommended For Youசென்னையில் H1B விசா மோசடியா? ஒரே ஆண்டில் 2.2 லட்சம் விசா வழங்கப்பட்டது எப்படி?சென்னையில் H1B விசா மோசடியா? ஒரே ஆண்டில் 2.2 லட்சம் விசா வழங்கப்பட்டது எப்படி?

நிறுவனம் இந்த இண்டர்னல் தேர்வு எப்படி மதிப்பிடப்படுகிறது என்பதில் வெளிப்படை தன்மையை பின் தொடர வேண்டும் எனக் கூறியிருக்கும் ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பு தேர்வு தாள் மற்றும் அதில் ஊழியர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை அவர்களிடம் வெளிப்படையாக பகிர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்வு தான் ஒரு நபரின் வேலை வாய்ப்பை தீர்மானிக்கிறது என்றால் அந்தத் தேர்வு எப்படி திருத்தப்பட்டது என்பதை பார்ப்பதற்கான உரிமை தேர்வு எழுதிய நபர்களுக்கு இருக்கிறது என தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில தொழில்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களை டேக் செய்துள்ள ஐடி ஊழியர்களுக்கான கூட்டமைப்பு டிசிஎஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், ஐடி ஊழியர்களின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளது.

Share This Article English summary

TCS using internal exams to force employees to resign #tcslayoff

TCS is now using internal exams to force employees to resign their jobs accuses IT employee’s forum. Story first published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Other articles published on Nov 26, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *