காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 13:40 [IST] Share This Article
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் திகழ்ந்து வருகிறது. கோயம்புத்தூர் நகரம் தொழில் ரீதியாக மட்டுமின்றி தற்போது ஐடி நகரமாகவும் ஜிசிசி நகரங்களுக்கான மையமாகவும் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது.
கோயம்புத்தூரில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது தமிழ்நாடு அரசு . முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக கோவைரைசிங் (kovairising) என்ற பெயரில் கோவை anthem ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெறக்கூடிய ஒரு பாடலாக மாறியிருக்கிறது.

காலரைத் தூக்கு என தொடங்கக்கூடிய இந்த பாடல் ஏராளமான கோவையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவையை சேர்ந்த அனைத்து தொழில்களையும் இந்த கோவைரைசிங் பாடலில் காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் இதயம் , தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் முனைவோரின் கூடு ,அறிவின் மையம், தொழிற்சாலைகளின் ஆலயம் , பண்பாட்டு மேடை என கோவையின் புகழ் முழுவதும் பாடலில் இடம்பெற செய்துள்ளனர்.
கோவையின் முக்கியமான அடையாளங்கள் அனைத்தும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் புதிதாக வர போகும் கிரிக்கெட் மைதானம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கோவை பாடலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவை வெறும் உற்பத்தி மையம் மட்டுமல்ல, அது பெரிய ஹை டெக் இண்டஸ்ட்ரியல் மையமாகும் புத்தாக்க மையமாகவும் மாறி வருகிறது என கூறியுள்ளார்.

நவீன மின்னணு உற்பத்தி, ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு துறை, டிரோன்கள், டிஜிட்டல் கட்டமைப்பு, டேட்டா மையங்கள் , ஜிசிசி மையங்கள் கொண்ட நவீன நகரமாக கோவை மாற போகிறது என அவர் கூறியுள்ளார். கோவை முதலீட்டாளர் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர், தூத்துக்குடி அடுத்து மூன்றாவதாக குறிப்பிட்ட மாவட்டத்தை இலக்காக கொண்டு கோவையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் எஸ்டிடி டேட்டா நிறுவனம் 4,200 கோடி ரூபாய், ஹூண்டாய் வியா நிறுவனம் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
ஜான்சன் எலக்ட்ரிக் 1300 கோடி ரூபாய் , கேலிபர் இண்டர்கனெக்ட் 3000 கோடி ரூபாய், டிடி கனெக்ஸ் 1057 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. சாம்கிராஃப் நிறுவனம் 400 கோடி ரூபாய், டெல்த் ஹெல்த்கேர் நிறுவனம் 1250 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
Share This Article English summary
Ahead of TN rising investors meet government releases Kovairising anthem
Ahead of Tnrising investors meeting in Coimbatore, Tamilnadu government has released Kovairising anthem that shows the growth and importance of Coimbatore. Story first published: Tuesday, November 25, 2025, 13:40 [IST] Other articles published on Nov 25, 2025