மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

  Market update

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!!

Market Update oi-Devika Manivannan By Published: Monday, November 24, 2025, 15:27 [IST] Share This Article

பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு கலை .அத்தனை எளிதாக அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் இந்த பங்குச்சந்தை முதலீட்டில் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதன் மூலமே பெரிய லாபமும் பார்க்கின்றனர் .

உலக அளவில் அப்படி புகழ் பெற்ற ஒரு நபர் தான் வாரன் பஃபேட். சிறுவயது முதலே சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் நபராக மாறினார் .இந்தியாவிலும் இதுபோன்ற வாரன் பஃபெட்டுகள் இருக்கிறார்கள் . ஆசிஷ் கச்சோலியா, அனில் கோயல் என குறிப்பிட்ட சில ஜாம்பவான்கள் பங்குச்சந்தை முதலீட்டின் மூலமே பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் பார்த்தவர்கள்.

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!!

பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் என்பது சில்லறை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல இது போன்ற பெரிய ஜாம்பவான்களையும் பாதிக்க தான் செய்கிறது .அந்த வகையில் இந்தியாவின் பெரும் முதலீட்டு முதலைகள் என அழைக்கப்படும் பல்வேறு முதலீட்டு ஜாம்பவான்களின் போர்ட்போலியோக்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இரட்டை இலக்க சரிவை சந்தித்து இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆசிஷ் தவானின் போர்ட்போலியோ ஜூன் காலாண்டில் 3,415 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 2,426 கோடி ரூபாய் என 29% சரிவை சந்தித்துள்ளது. இவர் M&M Financial Services, Religare Enterprises மற்றும் AGI Greenpac ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரித்துள்ளார். IDFC First Bank, Equitas Small Finance Bank , Quess Corp ஆகியவற்றில் பங்குகளை குறைத்துள்ளார்.

ஹேமேந்திர கோத்தாரியின் போர்ட்போலியோ ஜூன் காலாண்டில் 8,622 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 7,010 கோடி ரூபாய் என 18.7% சரிவை சந்தித்துள்ளது. Alkyl Amines Chemicals, Sonata Software , EIH Associated Hotels ஆகியவற்றில் முதலீடுகளை குறைத்துள்ளார்.

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!!

முகுல் அக்ரவாலின் போர்ட்போலியோ ஜூன் காலாண்டில் 6,990 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 5979 கோடி ரூபாய் என 14.5% சரிவை சந்தித்துள்ளது. இவர் சுமார் 30 நிறுவனங்களில் பங்குகளை குறைத்துள்ளார்.

ஆசிஷ் கச்சோலியா போர்ட்போலியோ ஜூன் காலாண்டில் 1,730 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 1,552 கோடி ரூபாய் என 10.3% சரிவை சந்தித்துள்ளது. இவர் Shaily Engineering, Safari Industries , Man Industries, ஆகியவற்றில் பங்குகளை அதிகரித்தும், Balu Forge, Zaggle Prepaid Xpro India ஆகியவற்றில் பங்குகளை குறைக்கவும் செய்துள்ளார்.

Also Readகிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை? கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?

அனில் கோயல் போர்ட்போலியோ ஜூன் காலாண்டில் 2095 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 1858 கோடி ரூபாய் என 11.3% சரிவை சந்தித்துள்ளது.ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் குடும்பத்தினரின் போர்ட்போலியோ 3.5% வீழ்ந்துள்ளது. அதே போல ஆகாஷ் பன்சாலியின் போர்ட்போலியோ 2.9% சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த சரிவுகளுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. செப்டம்பர் காலாண்டில் நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு 4.3%, நிஃப்டி ஸ்மால் கேப் 250 குறியீடு 6.2%, நிஃப்டி குறியீடு 3.6% சரிந்தன.

Recommended For Youஇது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

இந்த சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் உள்ளனர். நிமேஷ் ஷாவின் போர்ட்போலியோ ஜூன் காலாண்டை விட செப்டம்பர் காலாண்டில் 47.6% உயர்ந்து 3,184 கோடி ரூபாய் என மாறியுள்ளது. இவர் LMW , Asahi India Glass, ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரித்துள்ளார். விஜய் கேடியாவின் போர்ட்போலியோ ஜூன் காலாண்டை விட செப்டம்பர் காலாண்டில் 5.9% உயர்ந்துள்ளது. இவர் Atul Auto, Neuland Laboratories and Sudarshan Chemical ஆகியவறில் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளார்.

Share This Article English summary

Top Indian Investors Suffer Portfolio Losses up to 29% Amid Market Weakness

Over the three-month period ending in September, major investors Ashish Dhawan, Ashish Kacholia, Anil Goel, and Mukul Agrawal experienced significant portfolio declines ranging from 10% to 29%. Story first published: Monday, November 24, 2025, 15:27 [IST] Other articles published on Nov 24, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *