இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

  செய்திகள்

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

News oi-Devika Manivannan By Published: Monday, November 24, 2025, 12:03 [IST] Share This Article

சமூகவலைதளங்களில் சில நபர்கள் திடீரென டிரெண்டாகி விடுவார்கள். அப்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தான் தற்போது டிரெண்டாகும் நபராக இருக்கிறார்.

கான்பூர் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் அங்கே இருந்த ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். கையில் இரண்டு சாக்கு மூட்டைகளுடன் அவர் கடையில் நுழைந்திருக்கிறார். நகை கடை உரிமையாளர் மற்றும் அங்கே பணிபுரிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் நகை வாங்க வந்திருப்பதாகவும் இரண்டு சாக்கு மூட்டைகளிலும் நாணயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவர் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

இந்த இளைஞர் பான் விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய மனைவிக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்பதற்காக அவர் தன் வியாபாரத்தில் தனக்கு கிடைத்த 20 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். ஆசை மனைவிக்கு நகை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக 1 லட்சம் ரூபாய்க்கு 20 ரூபாய் நாணயங்களாக சேர்த்து வைத்துள்ளார்.

தன் கடையில் பெரும்பாலும் அனைவரும் நாணயங்களை கொடுத்து தான் பொருட்களை வாங்குவார்களாம். அவர் அந்த நாணயத்தை கரன்சி நோட்டுகளாக மாற்றாமல் தன்னுடைய மனைவிக்கு நகை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக நாணயமாகவே சேர்த்து வைத்து வந்திருக்கிறார். அப்படி ஒரு லட்சம் ரூபாய்க்கு அவர் நாணயங்களை மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார். தன்னுடைய மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கக்கூடிய சூழலில் அவர் திரும்ப வரும்போது அவருக்கு தங்க நகை வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்பதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

இரண்டு சாக்கு மூட்டைகளில் இருந்தும் 20 ரூபாய் நாணயங்களை அவர் கொட்டியுள்ளார். இதனை பார்த்து கடையில் இருந்த அனைவரும் ஆச்சர்யம் அடைந்தார்களாம். 20 ரூபாய் நாணயங்களாக மொத்தம் 5,290 நாணயங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 1.05 லட்சம் ரூபாய். இதனை அவர் விருப்பப்படி தன் மனைவிக்கு அந்த பணத்தை கொண்டு தங்க நகையாக வாங்கியுள்ளார்.

Also Readவாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!!வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!!

கடையில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அந்த நாணயங்களை எடுத்து எண்ணி பார்த்து பில் போட்டார்களாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருக்கிறது. உண்மையான காதலின் அடையாளம் என பலரும் இவரை பாராட்டியுள்ளனர். மனைவிக்கு நகை வாங்க இவர் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது என பலரும் கூறியுள்ளனர்.

Share This Article English summary

Kanpur Youngman collects Rs 1 lakh in coins to buy gold for his wife

Kanpur youngster collects Rs 1 lakh in coins for years to surprise wife with gold chain. Video goes viral. Story first published: Monday, November 24, 2025, 12:03 [IST] Other articles published on Nov 24, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *