பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

  செய்திகள்

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

News oi-Devika Manivannan By Published: Saturday, November 22, 2025, 16:27 [IST] Share This Article

பிட்காயின் உள்ளிட்ட முக்கியமான கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது . உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல முதலீட்டு ஆலோசகரும் ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்து விட்டதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை பிட்காயினை வாங்குங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்து ராபர்ட் கியோசாகி தற்போது திடீரென தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்திருப்பது அறிவித்துள்ளது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ராபர்ட் கியோசாகி தன் கைவசம் இருந்த பிட்காயின்களை ஒரு பிட்காயின் 90,000 டாலர்கள் என்ற மதிப்பில் 2.25 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து பணமாக்கியதாக தெரிவித்திருக்கிறார்.

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

இதனால் முதலீட்டாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிரிப்டோ கரன்சி சந்தை வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. தங்கத்துக்கு நிகராக பலரும் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது , அமெரிக்காவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு ஈடிஎஃப்களுக்கு அனுமதி அளித்தது உள்ளிட்டவை கிரிப்டோ கரன்சிகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்தன .

Also Readஓவர்நைட்டில் மாறிய தொழிலாளர் சட்டங்கள்!! நிறுவனங்கள் இனி ஊழியர்களுக்கு இதையெல்லாம் செஞ்சே ஆகனும்!!ஓவர்நைட்டில் மாறிய தொழிலாளர் சட்டங்கள்!! நிறுவனங்கள் இனி ஊழியர்களுக்கு இதையெல்லாம் செஞ்சே ஆகனும்!!

பலரும் போட்டி போட்டுக் கொண்டு கிரிப்டோவில் முதலீடு செய்து லாபம் பார்த்தார்கள் . ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு கோடி ரூபாயை கடந்தும் வர்த்தகமானது. வரும் காலத்தில் பிட்காயின் சந்தை இன்னும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் ஏராளமானவர்கள் முதலீட்டை குவித்து தொடங்கினர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிட்காயின் சந்தை பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது .நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பிட்காயின் சந்தை சரிவில் தான் இருந்து வருகிறது. இன்றைய தினம் ஒரு பிட்காயின் மதிப்பு 74 லட்சம் ரூபாய் என குறைந்திருக்கிறது .

அதாவது ஒரு மாத காலத்தில் பிட்காயின் மதிப்பு 21 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 9% வரை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் பிட்காயின் திமிங்கலம் அழைக்கப்படும் ஓவன் குண்டென் என்பவர் தன் வசம் இருந்த 1.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிட்காயின்களை விற்பனை செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் . தன் வசம் இருந்த அனைத்து பிட்காயின்களையும் விற்பனை செய்ததாக அறிவித்துள்ளார்.

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

தற்போது ராபர்ட் கியோசாகியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிட்காயினை 6000 டாலர் என கொடுத்து நான் வாங்கினேன் தற்போது 90 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறேன் 2.25 மில்லியன் டாலர்கள் இதன் மூலம் எனக்கு வருமானமாக கிடைத்திருக்கிறது என கூறியிருக்கிறார். தற்போது இந்த பணத்தை நான் ரொக்கமாக வைத்திருக்கிறேன்.

Recommended For Youஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!

இந்த பணத்தை இரண்டு சர்ஜரி அறுவை சிகிச்சை மையங்களை வாங்குவதற்காகவும் பில் போர்டு தொழிலில் முதலீடு செய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன் என தெரிவித்திருக்கிறார் . இதன் மூலம் எனக்கு மாதத்திற்கு 27 ,500 டாலர்கள் வருமானமாக கிடைக்கப் போகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். பிட்காயின் முதலீட்டில் இருந்து லாபம் எடுத்து அதனை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

Share This Article English summary

Why investors like Robert Kiyosaki, Owen Gunden liquidating bitcoins?

As Bitcoin plunges financial educator Robert Kiyosaki says he has liquidated $2.25 million in BTC, converting it into cash-flow assets. Story first published: Saturday, November 22, 2025, 16:27 [IST] Other articles published on Nov 22, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *