கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

  செய்திகள்

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Share This Article

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் 2025ஆம் ஆண்டுக்கான டெக் மாநாட்டை நடத்தியது. இதில் பெங்களூருவை தாண்டி முதலீடுகளை ஈர்ப்பதை கவனமாக கொண்டு 2025-30ஆம் ஆண்டுக்கான டெக் பாலிசியை வெளியிட்டது.

டெக் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. குறிப்பாக விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் நிறுவப்பட்டு வரும் 500 கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஆலை இன்னும் 9 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது. விப்ரோ ஐடி நிறுவனம் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!!

விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட கருவிகளுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. தற்போது பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்கியூட் போர்டு இருக்கிறது. அனைத்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகளிலும் பச்சை நிறத்தில் இந்த போர்டு இருக்கும்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த பிரிண்டட் சர்க்கியூட் போர்டினை பெருமளவில் இறக்குமதி செய்து தான் பயன்படுத்துகிறது. இந்நிலையில் தான் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் பிரிண்டட் சர்க்யூட் போர்ட் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது.

Also Readதமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு? - உண்மை என்ன?தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு? – உண்மை என்ன?

500கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படும் இந்த ஆலை அடுத்த 9 மாதங்களில் செயல்பாடுகளை தொடங்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ் பண்டிட் தெரிவித்திருக்கிறார் . தற்போது இந்த ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் ஆறு மாதங்களில் இந்த பணிகள் முடிந்து விடும் என்றும் ஒன்பது மாதங்களில் பிசிபி உற்பத்தி தொடங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!!

இந்தியாவில் தற்போது பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு உற்பத்தி என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் இது 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சந்தை கொண்டதாக உருவெடுத்து இருக்கிறது. பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகளிலும் பயன்படுத்தப்படக்கூடிய இந்த பிசிபி-ஐ 85 சதவீதம் இந்தியா வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.

இது தற்போது இந்திய சந்தையில் இது 280 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கிறது 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த சந்தையின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் கொண்டதாக மாறும். இந்த நிலையில் தான் கர்நாடகாவில் வடக்கு பெங்களூருவில் இந்த நிறுவனம் உற்பத்தி ஆலையை அமைப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Recommended For Youஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

பெங்களூரு டெக் மாநாட்டில் பெங்களூர் தாண்டி பல்வேறு நகரங்களிலும் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்களும் முன்வந்திருப்பதாக கர்நாடகா ஐடி துறை அமைச்சர் கார்கே தெரிவித்திருக்கிறார் . செமி கண்டக்டர், மின்சார வாகன பேட்டரி உற்பத்தி, பயோ டெக் மற்றும் ஐடி என பல்வேறு பிரிவுகளிலும் பல நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் .

டீப் டெக் துறையில் 40 ஸ்டார்ட் அப்கள் பெங்களூருக்கு வெளியே இருக்கக்கூடிய நகரங்களில் அமைக்கப்படுவதாகவும், இவற்றுக்கு 50 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி அரசு தரப்பில் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Share This Article English summary

Wipro electronics to begin production of PCB at Bengaluru unit in 9 months

Wipro Electronics to begin operations at its Rs 500 crore Printed Circuit Board (PCB) manufacturing unit in Bengaluru North, in nine months. Story first published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Other articles published on Nov 20, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *