இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:08 [IST] Share This Article
உலக அளவில் ஏஐ தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. கூகுள் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிக அளவு ஏஐ பயன்படுத்தி தொடங்கிவிட்டன. ஊழியர்களும் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தில் யார் முன்னிலை வகிப்பது என்பது குறித்து பெரிய டெக் நிறுவனங்கள் மத்தியில் போட்டியே நிலவுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஏஐ தொழில்நுட்பம் தன்னுடைய பதவியையே பறித்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருப்பதாக கூறுகிறார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சியை பார்த்தால் என்னுடைய தலைமை செயல் அதிகாரி பதவியே பறித்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். ஏஐ தொழில்நுட்பத்தால் மிக எளிமையாக எடுத்து கொண்டு செய்ய கூடிய வேலைகளில் சிஇஓ பதவிகளும் உண்டு என்கிறார். வரும் நாட்களில் என்னுடைய பதவியே கூட ஏஐ எடுத்து கொண்டு இன்னும் திறம்பட செயல்படலாம் என கணித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் சில வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பது உண்மைதான். ஆனால் பல்வேறு வேலை வாய்ப்புகள் மாற்றமடைவதையும் நாம் கவனிக்க வேண்டும் என்கிறார். அதாவது ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டுகிறார்.
Also Read
H1B விசா விவகாரம்: மவுனம் கலைத்த சுந்தர் பிச்சை..! டிரம்புக்கு தக்க பதிலடி..!
ஏஐ-இன் முழுமையான திறன்களை நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவர இன்னும் பல காலம் ஆகும். ஆனால் அந்த பயணத்தில் மனிதர்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் .
சாட்ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேனும் ஒரு நாள் என்னுடைய வேலையை கூட ஏஐ எடுத்துக் கொள்ளும் என்னைவிட சிறப்பாக ஏஐ செயல்பட போகிறது என கூறியிருந்தார் . அதே போல கிளார்னா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான செபாஸ்டியன் நம்முடைய அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் ஏஐ-க்கு வந்துவிட்டது ஏன் என்னுடைய வேலைக்கு கூட இனி உத்திரவாதம் கிடையாது என கூறியிருக்கிறார்.
Recommended For You
ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?
சில டெக் நிறுவன தலைவர்கள் ஏஐ திறன் குறித்து புகழ்பாடும் நிலையில், சில டெக் நிறுவன தலைவர்கள் இதற்கு மாற்று கருத்து கூறியுள்ளனர் . என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் ஒரு மனிதர் செய்யக்கூடிய வேலையை 100% அதே போல ஏஐ-ஆல் செய்து விட முடியாது என கூறுகிறார். குறிப்பிட்ட சில வேலைகளை வேண்டுமென்றால் மனிதர்களை விட சிறப்பாக ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியுமே தவிர அனைத்து இடங்களிலும் மனிதர்களுக்கு மாற்றாக அது உருவாக முடியாது என தெரிவித்திருக்கிறார்.
Share This Article English summary
Google CEO Sundar Pichai says CEO jobs are Vulnerable to AI
Google CEO Sundar Pichai says AI will soon perform complex tasks and could potentially replace CEOs in future. Story first published: Thursday, November 20, 2025, 16:08 [IST] Other articles published on Nov 20, 2025