ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Share This Article
சீனா மிக தந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாடு . நிதி ரீதியாக கஷ்டப்படும், ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் தானாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களை தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்து விடும். பெரும்பாலான வல்லரசு நாடுகள் சீனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாக சீனாவின் தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறுவது உண்டு.
வழக்கமாக சீனா ஏழை நாடிகளுக்கு தான் கடன் வழங்குகிறது தங்களுக்கு அடிமையாக வைத்து கொள்கிறது என உலகம் நினைக்கிறது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனா எந்த நாடுகளுக்கு எல்லாம் கடன் வழங்கி இருக்கிறது என வெளியாகி இருக்கும் தரவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் சீனாவிடம் இருந்து கடன் பெற வேண்டாம் என எச்சரித்து வந்த அமெரிக்காவே தற்போது சீனா விரித்த கடன் வலையில் சிக்கி இருப்பது உலக பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவில் சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த வில்லியம் அண்ட் மேரி பல்கலைக்கழகத்தின் ஆய்வகமான AidData சீனா பல்வேறு நாடுகளுக்கும் வழங்கியிருக்கும் கடன்கள் குறித்த தரவுகளை வெளியிட்டு இருக்கிறது . அதில் சீனா அரசாங்கம் மற்றும் சீன அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களும் 2000ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வரையிலான 23 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.2 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான கடன் மற்றும் நிதி உதவியை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

பொதுவாக சீனா வளர்ந்து வரும் நாடுகளுக்கு தான் கடன் வழங்கி தன்னுடைய வலையில் சிக்க வைக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இந்த தரவுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. சீனா உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளுக்கு அதிக கடன் வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
Also Read
பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமல்லாமல் உலக அளவில் அதிக கடன் வழங்கக்கூடிய ஒரு நாடாகவும் சீனா தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகின் அதிகாரமிக்க நாடாக படிப்படியாக அமெரிக்கா தன்னுடைய இடத்தை சீனாவுக்கு விட்டு தந்து வருகிறது என இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 23 ஆண்டுகளில் சீன வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய சீன அரசுக்கு சொந்தமான அமைப்புகள் 2.2 டிரில்லியன் டாலர் கடன் வழங்கியிருக்கின்றன இதில் 50 சதவீத கடன், வளர்ந்த நாடுகளுக்கு சென்று இருக்கின்றன, குறிப்பாக அமெரிக்கா 200 பில்லியன் டாலர் கடனை பெற்றிருக்கிறது. அதாவது சீனா நேரடியாக அமெரிக்கவுக்கு கடன் வழங்குவது கிடையாது.
அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதற்கு அல்லது அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக ஷெல் நிறுவனங்கள் மூலம் சீன கடன்கள் வழங்குகிறது. அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட கடன்களில் 88 சதவீதம் உயர் தொழில்நுட்ப மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவீன் டெக் மற்றும் அரிய வகை கனிமங்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேடி தேடி கடன் வழங்கியுள்ளது.
Recommended For You
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு? – உண்மை என்ன?
அமெரிக்கா மட்டுமில்லாமல் பிரிட்டன் 60 பில்லியன் டாலர்கள் ,ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் 161 பில்லியன் டாலர்கள் என கடன் வாங்கி இருக்கின்றன. அமெரிக்கா பல்வேறு வெளிநாட்டு நிதி உதவிகளை நிறுத்தி இருக்கும் சூழலில் பொருளாதாரம், ராணுவம், நவீன தொழில்நுட்பங்கள், ஏஐ தற்போது நிதி உதவி என உலகின் அதிகாரமிக்க நாடாக தன்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சீனா மிக ராஜ தந்திரமான முறையில் நிகழ்த்தி வருகிறது.
Share This Article English summary
From Debt Trap to Tech Race: How China Targets Wealthy Nations like US
China has lent or provided over $2.2 trillion globally since 2000, with the United States actually receiving more Chinese loans and investments than any other country during this time. Story first published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Other articles published on Nov 20, 2025