தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 9:25 [IST] Share This Article
இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட பட்ஜெட்டிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
திடீரென கடந்த ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது . அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக 15 நாட்களிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 50% வரை தக்காளியின் விலை உயர்ந்திருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒரு மாதத்திலேயே 25 லிருந்து 100% வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்ய கூடிய மகாராஷ்ட்ராவிலேயே 45% வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது. அதே போல மிகப்பெரிய தக்காளி வினியோக சந்தையான டெல்லியில் 26 சதவீதம் என விலை உயர்ந்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டு இருக்கும் தரவுகளின் படி ஒட்டு மொத்த இந்தியாவில் சராசரி தக்காளி விலை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் கிலோ 46 ரூபாய் என உயர்ந்து 27% அதிகரித்துள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் 100% மேல் தக்காளி விலை உயர்வு கண்டிருக்கிறதாம். ஆந்திரா பிரதேசம் , கர்நாடகா மாநிலங்களில் ஒரே மாதத்தில் தக்காளி விலை 40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. நல்ல தரமான தக்காளி விலை கிலோ 80 ரூபாய் விலை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை தக்காளி விலை கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
Also Read
தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!!
அக்டோபரில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பயிர்கள் சேதமடைந்ததே தக்காள் விளைச்சல் குறைந்து விலை அதிகரிக்க காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். திருமண சீசன் தொடங்கியது ,அடுத்தடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வர இருப்பதால் இனிவரும் நாட்களிலும் தக்காளியின் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Recommended For You
வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!
அக்டோபர் மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 0.25% என குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலை குறைந்தது தான் . ஆனால் தற்போது தக்காளியின் விலை உயர்ந்து வருவது மீண்டும் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும்.
கடந்த ஒரு வார காலமாக மகாராஷ்டிரா , கர்நாடகா ,குஜராத் மாநில சந்தைகளுக்கு தக்காளி வரத்து பாதி அளவு குறைந்து விட்டதாக தக்காளி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தக்காளி விலை உயர்வால் இனி தக்காளி சட்னி, தக்காளி சாதத்திற்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Share This Article English summary
Sudden increase in Tomato prices to tighten our household budget
Due to excessive rainfall, all over the India Tomato prices have increased more than 50%. Here is what the government data says about it. Story first published: Thursday, November 20, 2025, 9:25 [IST] Other articles published on Nov 20, 2025