அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:54 [IST] Share This Article
தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தான் பேசி வருகிறோம். பல்வேறு வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஒயிட் காலர் வேலைகளை எல்லாம் படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டது ஏஐ. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் குடிமக்களுக்கு ஏஐ குறித்து அடிப்படை புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கி இருக்கிற. இதற்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அனைவருக்கும் ஏஐ என்ற பெயரில் ஒரு இலவச பாடத் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியா ஏஐ திட்டத்தின் கீழ் Yuva AI for All என்ற இலவச பயிற்சியை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாட திட்டத்தில் இணைந்து ஏஐ குறித்த அடிப்படைகளை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலானவர்கள் தற்போது ஏஐ பயன்படுத்தினாலும் அது எப்படி செயல்படுகிறது என்ற புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். எனவே AI literacy கொண்டு வர வேண்டும் என இப்படி ஒரு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
ஏஐ என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது, அதனை எப்படி பாதுகாப்பாக நாம் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் ,என்பதை அனைத்து குடிமக்களிடமும் சென்று சேர்க்க கூடிய வகையில் இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள். முதல் கட்டமாக ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏஐ அடிப்படைகளை கற்றுத் தருவதே இந்த திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
Also Read
பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!
அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.5 மணி நேரத்தில் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் தங்களுடைய லேப்டாப் மற்றும் தங்களுடைய ஸ்மார்ட் போன் வாயிலாகவே இந்த பாடத்தை கற்றுக் கொண்டு ஏஐ குறித்த அடிப்படைகளை புரிந்து கொள்ளலாம் . இந்தியாவின் முதல் இலவச ஏஐ பாட திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
Recommended For You
20களிலேயே திருமணம் , குழந்தை அவசியமா? – ராம்சரண் மனைவி உபாசனாவின் பதிவுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில்!!
இதில் இணைந்து ஏஐ பயில விரும்புபவர்கள் https://www.futureskillsprime.in/course/yuva-ai-for-all/ என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் பெயர் , மின்னஞ்சல் முகவரி தந்து பதிவு செய்து பாடத்தை படிக்கலாம். இந்த பாடத்தை படித்து முடிப்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் . மக்கள் பிராக்டிக்கலாக கற்றுக் கொள்ளும் வரையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தொழில்துறை நிபுணர்கள் என அனைத்து பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள் .
Share This Article English summary
What is YUVA AI for ALL? How to join this free AI course?
The Ministry of Electronics and Information Technology has rolled out a free course called YUVA AI for ALL under the IndiaAI Mission. Story first published: Wednesday, November 19, 2025, 16:54 [IST] Other articles published on Nov 19, 2025
