வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article
இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.
வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.

கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை பராமரிப்பது, தேவையான காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வைப்பது, வீட்டில் ஏதேனும் பொருள் ரீப்பேர் ஆனால் அதனை சீர் செய்வது ஆகியவற்றை செய்வதற்கு ஒரு தம்பதி ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஹோம் மேனேஜர் என ஒருவரை நிர்ணயம் செய்திருப்பது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது.
கிரேலேப்ஸ் ஏஐ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அமன் கோயல். இவரும் , இவருடைய மனைவியும் ஐஐடியில் கல்வி பயின்றவர்கள். இருவருமே தற்போது கிரேலேப்ஸ் நிறுவனத்தை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் வீட்டை நிர்வாகம் செய்வதற்காக ஒரு நபரை நியமனம் செய்து அவருக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்குகின்றனர்.

அமன் கோயலே தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் இதனை வெளியிட்டிருக்கிறார். என்னுடைய வீட்டை முழுமையாக நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஒரு ஹோம் மேனேஜரிடம் வழங்கி இருக்கிறோம் என கூறியுள்ளார். மூன்று வேளைக்குமான உணவினை திட்டமிடுவது, வீட்டில் ஏதேனும் ரிப்பேர் ஆகிவிட்டால் அதனை சீர் செய்வதை , வீட்டை பராமரிப்பது ,சரியான நேரத்திற்கு மளிகைப் பொருட்களை வாங்குவது .துணிமணி துவைத்து அவை முறையாக எடுத்து வைக்கப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை அவர் மேற்கொள்கிறாராம். இதற்காக அவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள்.
Also Read
மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா?
அமன் கோயலும் அவருடைய மனைவியும் கிரேலேப்ஸ் ஏஐ நிறுவனத்தை தொடங்கி அதனை கட்டமைப்பதிலேயே முழு நேரமும் ஈடுபட்டிருப்பதால் வீட்டை நிர்வாகம் செய்ய நேரம் இல்லையாம். அதில் நேரத்தை வீணாக்காமல் முழு கவனத்தையும் நிறுவனத்தின் வளர்ச்சியில் செலுத்தப் போவதாக முடிவு செய்து , படித்த ஒரு பெண்ணை வீட்டை நிர்வகிக்க ஹவுஸ் மேனேஜர் என பதவி கொடுத்திருக்கிறார்கள்.
Recommended For You
ஐடி ஊழியர்கள் சிஸ்டமை விட்டு நகரக் கூடாதா? கண்காணிப்பு குறித்த சர்ச்சைக்கு Cognizant விளக்கம்!!
எனவே எந்த ஒரு கவலையும் இன்றி தங்களால் நிறுவனத்தில் கவனம் செலுத்த முடிவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு தன்னுடைய ஹவுஸ் மேனேஜர் ஒரு ஹோட்டலில் ஆபரேஷன்ஸ் ஹெட் என்ற பதவியில் வேலை செய்தவராம். வீட்டை நிர்வகிப்பது ஒரு வேலை, அதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்பது உங்களுக்கு பெரிய விஷயமாக தோன்றலாம் ஆனால் எங்களுக்கு எங்களுடைய நேரம் முக்கியம் அந்த நேரத்தை எங்களுக்கு அவர் மிச்சப்படுத்தி தருவதற்காக தான் இந்த சம்பளம் என அமன் கோயல் கூறியுள்ளார்.
பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்தவர்களுக்கு கூட இவ்வாறு சம்பளம் கிடைப்பதில்லை என பலரும் புலம்புகின்றனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் கிண்டல் செய்துள்ளனர்., ஒரு சிலர் இந்த தம்பதியின் முடிவை பாராட்டியும் உள்ளனர்.
Share This Article English summary
New trend: Greylabs AI CEO’s appoints home manager to take care household chores pays 1L salary
Aman Goel, founder and CEO of GreyLabs, revealed that he and his wife have hired a home manager to take care of all household chores and they pay Rs 1 lakh as a salary. Story first published: Tuesday, November 18, 2025, 15:22 [IST]