கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள்

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article

நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.

டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின் மதிப்பு 1,26,680 அமெரிக்க டாலர்கள் என வரலாற்று உச்சத்தை எட்டியது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது கிட்டத்தட்ட 1.11 கோடி ரூபாய் ஆகும்.

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

1 பிட்காயின் வைத்திருந்தாலே அவர்கள் கோடீஸ்வரர்கள் என்ற நிலை ஏற்பட்டது. பல்வேறு அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களும் கூட பிட்காயின் போன்ற கிரிப்டோ முதலீடுகளை அதிகரித்தன. இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வேகமாக சரிவடைந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பிட்காயின் மதிப்பு மெதுவாக சரிவடைந்து வந்தது.1 லட்சம் டாலருக்கும் கீழ் குறைய தொடங்கியது.

தற்போது பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பாராத வகையில் 90 ஆயிரம் டாலர்களுக்கும் கீழ் சென்று விட்டது. இது பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது . கடந்த ஓராண்டு காலத்தில் வந்த லாபங்கள் அனைத்தையுமே இழந்து பிட்காயின் முதலீட்டாளர்கள் தவிக்கின்றனர். கிரிப்டோ சந்தை கரடியின் பிடியில் வந்து விட்டதாக பல நிபுணர்களும் கூறுகின்றனர்.

Also Readதங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

கிடைத்த லாபத்திற்கு தங்கள் முதலீடுகளை விற்பனை செய்ய தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக ஆப்ஷன் டிரேடிங்கில் 80,000 டாலர்கள் என்ற ஆப்ஷனை வாங்கும் போக்கு அதிகரித்து இருப்பதால் பிட்காயின் மதிப்பு அதற்கும் கீழ் செய்ய வாய்ப்புள்ளதாக சர்வதேச கிரிப்டோ சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .

டிரம்பின் பதவி ஏற்பை தொடர்ந்து அதிக அளவில் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் தற்போது கவலையில் இருக்கின்றனர். குறிப்பாக நிறுவனங்கள் இந்த சரிவில் பெரிய இழப்பை சந்தித்து இருக்கின்றன . அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை , ஏஐ சந்தை பெரிய குமிழியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வரக்கூடிய கணிப்புகள் கிரிப்டோ சந்தை சரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

Recommended For Youசீனாவுக்கு அடித்த தங்க ஜாக்பாட்!! 15 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ??சீனாவுக்கு அடித்த தங்க ஜாக்பாட்!! 15 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ??

அக்டோபர் மாதத்திற்கு பிறகு பலரும் கிடைத்த லாபம் போதும் என சந்தையில் இருந்து வெளியேறுகின்றனர் என்றும் 19 பில்லியன் டாலர்கள் மதிப்பு டிஜிட்டல் சொத்துகளை விற்பனை செய்து பணமாக்கி இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக கிரிப்டோ ஃபியூச்சர் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம் சொலோனா போன்ற சிறிய டோக்கன்கள் மதிப்பு குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் extreme fear என்ற நிலையில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share This Article English summary

Why is the cryptocurrency market in fear? Why is bitcoin plunged?

The world’s largest cryptocurrency bitcoin plunged below $91,500 Monday, deepening a selloff that erased all of its gains for the year. Story first published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Other articles published on Nov 18, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *