சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

goldf43-1763440607

  செய்திகள்

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 18, 2025, 10:08 [IST] Share This Article

சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நவம்பர் 13ஆம் தேதி அன்று திடீரென தங்கத்தின் விலை 11 ,900 ரூபாய் என உச்சத்தை எட்டியது .

இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து இருக்கிறது . சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 11,540க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 140 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 92,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 1,120 ரூபாய் விலை குறைந்து 91,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 11,300 இல் இருந்து 11 ,900 ரூபாய்க்குள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் 6 நாட்களில் 3 நாட்கள் தங்கம் விலை குறைந்து, 3 நாட்கள் உயர்வை கண்டது. இந்த வாரம் தொடர்ந்து 2 நாட்களாக குறைந்து வருகிறது. இந்த இறங்குமுகம் நீடிக்குமா என்ற குழப்பம் மக்களிடையே நீடிக்கிறது.

Also Readதங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

24 கேரட் தங்கம் விலை இன்று சரிவடைந்து இருக்கிறது. ஒரு கிராமுக்கு 152 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 12,589 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 12,437 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 1,00,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 99 ,496 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .18 கேரட் ஆபரண தங்கம் இன்று கிராம் 115 ரூபாய் விலை குறைந்து 9510 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 920 ரூபாய் விலை சரிந்து 76,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

வெள்ளி விலை இன்று மூன்று ரூபாய் குறைந்திருக்கிறது . நேற்று ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 1,73,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கடந்த அக்டோபர் 20ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதி அன்று திடீரென 1,83,000 ரூபாய என விற்பனையானது . இதனை அடுத்து படிப்படியாக சரிந்து தற்போது 1,73,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Share This Article English summary

Gold rate in Chennai declines second consecutive day

Gold rate in Chennai declines second consecutive day. Here is how much one gram ornamental gold cost in Chennai today. Story first published: Tuesday, November 18, 2025, 10:08 [IST] Other articles published on Nov 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *