தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! – Allmaa

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!   – Allmaa

  செய்திகள்

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 18, 2025, 8:26 [IST] Share This Article

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை உலகம் முழுவதும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏறுவது , இறங்குவது என ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகிறது .

தங்கத்தின் இந்த விலை ஏற்ற இறக்கம் இப்படியே நீடிக்குமா, டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை எப்படி மாறும், 2025 ஆம் ஆண்டு போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை உயருமா , தங்கத்தை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த துல்லியமான கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!

யுபிஎஸ் வங்கியின் மூத்த ஆய்வாளர் ஜோனி டீவஸ் அளித்திருக்கும் தகவலின்படி 2026 ஆம் ஆண்டில் தங்கம் வலுவான வளர்ச்சி அடையும் என கூறியிருக்கிறார். புவி சார்ந்த பதட்டங்கள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் தற்போது தங்கத்தின் விலையில் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றங்களுக்கு காரணம் எனக் கூறும் அவர் அடுத்த ஆண்டில் தங்கத்தின் விலை நிச்சயம் உயரும் என தெரிவிக்கிறார்.

2026ஆம் ஆண்டில் அடுத்தடுத்த வரலாற்று உச்சங்களை எல்லாம் தங்கம் எட்ட போகிறது என்கிறார். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இதுவரை இல்லாத உச்சமாக அக்டோபரில் 4300 டாலர்களை கடந்தது. தற்போது விலை குறைந்து 4100 டாலர்கள் முதல் 4200 டாலர்களுக்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4500 டாலர்கள் என்று நிலையை எட்டும் எனக் கூறுகிறார் . 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 4200 டாலர்களை கடந்து புது ஆண்டில் 4500 டாலர்களை எட்டும் என்கிறார்.

Also Read45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

தங்கம் 5000 டாலர்கள் வரை செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அமெரிக்க பொருளாதாரம் வலுவிழந்து காணப்படுவது, அமெரிக்க மத்திய வங்கி சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருப்பது உள்ளிட்டவையும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் செயல்பாடுகளும் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தும் என கூறுகிறார்.

தங்கம் விலை உயரப் போகிறது என்பதற்காக மொத்த பணத்தையும் தங்கத்தில் போட்டுவிடாமல் தங்களுடைய போர்ட்போலியோவை பன்முகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறார். தற்போது தங்கத்தின் விலை குறைகிறது எனும்போது அந்த வாய்ப்பை தங்கத்தை வாங்குவதற்கான அல்லது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறும் இவர் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வைக்கின்றன என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார்.

Recommended For You2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

ஆண்டு இறுதி என்பதால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பார்கள் எனவே டிசம்பரில் தங்கத்தின் விலை குறையும் என்றும் ஜனவரியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் தெரிவிக்கிறார் . 2026ஆம் ஆண்டில் தங்கத்தை விட வெள்ளியின் விலை உயரும் என அவர் உறுதியாக கூறுகிறார். வெள்ளியை எந்த நாட்டின் மத்திய வங்கியும் வாங்கி வைப்பதில்லை, ஆனால் தொழில்துறை ரீதியாக அதன் தேவை அதிகரித்துள்ளது என்கிறார். 2025ஆம் ஆண்டில் அக்டோபரில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 54 டாலர்கள் வரை உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. 2026ஆம் ஆண்டில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 60 முதல் 65 டாலர்கள் வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

Share This Article English summary

Gold & Silver may be headed for another strong year says UBS

Gold may be headed for another strong year says UBS. It has set a $4,500 target for gold in 2026, the brokerage also sees $5,000 as an upside scenario. Story first published: Tuesday, November 18, 2025, 8:26 [IST] Other articles published on Nov 18, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *