மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 16:40 [IST] Share This Article
இந்தியாவில் சாலையோரங்களில் சிறுசிறு கடைகளில் விற்கப்படும் உணவுகளுக்கு எப்பொழுதுமே வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் .சாதாரணமாக ஒரு சைக்கிளில் டீ கொண்டுவந்து விற்பனை செய்பவர்களில் தொடங்கி உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் வரை அவர்களுக்கென சரியான இடம் கிடைத்துவிட்டது, சரியான வாடிக்கையாளர்களை பிடித்து விட்டார்கள் தரமான அதே வேளையில் ருசியான உணவை தருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் தொழில் வெற்றி அடையும்.
அப்படி பெங்களூருரை சேர்ந்த ஒரு தெருவோர மோமோ விற்பனை கடை குறித்து தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். பெங்களுருவை சேர்ந்த ஒரு மோமோ விற்பனை செய்யக்கூடிய வியாபாரி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாக இருக்கக்கூடிய வீடியோ பெங்களூரு வாசிகள் மத்தியில் ஹாட்டாக பேசப்படும் ஒரு டாபிக்காக மாறி இருக்கிறது.

Cassy Pareira என்பவர் டிஜிட்டல் கிரியேட்டராக இருந்து வருகிறார். இவர் பெங்களூருவில் தெருவோரத்தில் மோமோ கடை நடத்தி வரக்கூடிய ஒரு வியாபாரியிடம் ஒரு நாள் அசிஸ்டன்டாக வேலை செய்திருக்கிறார் . அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் வெளி வந்திருக்கும் தகவல்கள் தான் நம்மை பெருமளவில் ஆச்சரியப்படுத்துகின்றன.
அந்த வீடியோவில் அந்த ஒரு நாள் முழுவதும் இந்த மோமோ கடையில் என்னென்ன நடக்கிறது என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார் . முதலில் எப்படி வாடிக்கையாளர்களுக்கு மோமோவை விநியோகம் செய்வது, ஒரு தட்டில் எத்தனை மோமோக்களை வைக்க முடியும் என்பது குறித்து கற்றுக் கொண்ட அவர் இந்த பகுதியில் இந்த கடை இவ்வளவு புகழ்பெற்றதா என்பதை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன் என தெரிவித்திருக்கிறார்.

கடை திறந்த முதல் ஒரு மணி நேரத்தில் 118 பிளேட்டுகள் விற்பனையானதாக கூறுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகை தர தொடங்கினார்கள் . ஒருபுறம் மோமோ தயாரிக்க வேண்டும் ,மற்றொருபுறம் வரக்கூடிய வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டும் என அடுத்தடுத்து பிசியாக வேலை இருந்தது என பதிவு செய்திருக்கும் அவர் மக்களின் வருகையை கண்டு நான் பிரமித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
Also Read
ஐடி வேலை வேண்டாம் என ஐஸ்கிரீம் விற்க வந்த பிரதீப்!! 6 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கு நீங்களே பாருங்க!!
இந்த கடை மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் தான் நடக்கிறது . ஒரு பிளேட் மோமோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு நாள் மாலையிலேயே இவர்கள் 950 பிளேட்டுகளை விற்பனை செய்திருக்கிறார்கள் அப்படி என்றால் இவர்களுடைய வருமானம் சராசரியாக 1,04,500 ரூபாய் , ஒரு மாதத்திற்கு என பார்க்கும்போது 31.35 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைக்கிறதாம். இந்த வீடியோ தான் தற்போது instagram பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
பட்டப்படிப்பை முடித்தவர்களை விட மோமோ விற்பனையில் நல்ல வருமானம் வருகிறதே என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறுவதை பார்க்க முடிகிறது. ஒரே நாள் இரவிலேயே பல லட்சம் லைக்குகளையும் பார்வைகளையும் பெற்றிருக்கிறது இந்த வீடியோ. ஆனாலும் இந்த வருமானத்தில் அவர்களுக்கு கிடைக்க கூடிய லாபம் எவ்வளவு என்று தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.
Recommended For You
சீனாவுக்கு அடித்த தங்க ஜாக்பாட்!! 15 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ??
ஒரு சிலர் இந்த இவர் கூறக்கூடிய கணக்கு சரியானதாக இல்லை ஒரு நாளைக்கு 900க்கும் அதிகமான பிளேட்டுகள் விற்பனை செய்கிறார்களா என்பதை நம்ப முடியவில்லை என தெரிவிக்கின்றனர் . ஒரு சிலர் ஒரு பிளேட்டை தயாரித்துக் கொடுப்பதற்கு ஒரு நிமிடம் என வைத்துக் கொண்டால் கூட 900 பிளேட்டுகளுக்கு 900 நிமிடங்கள் அப்படி என்றால் 15 மணி நேரமா ஒரு வேலை செய்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
Share This Article English summary
Can a momo seller earn Rs.1 lakh per day? – Instagram video goes viral
A Digital content creators video about momo seller in bengakuru goes viral in Instagram. The creator says the momo seller earns 1 lakhs per day by selling momo Story first published: Sunday, November 16, 2025, 16:40 [IST] Other articles published on Nov 16, 2025