திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

  செய்திகள்

திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

News oi-Devika Manivannan By Published: Sunday, November 16, 2025, 15:46 [IST] Share This Article

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.

பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் வந்து முதலீடு செய்கின்றன. இதனால் வெளியில் இருந்து வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது எனும்போது அவர்கள் பொழுது போக்குவதற்கான தளங்களும் அந்த இடத்தில் கட்டாயம் இருந்தாக வேண்டும். அப்பொழுதுதான் அந்த முதலீடுகளும் வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் அந்த இடத்தில் நீடிப்பார்கள் .சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் மால்கள் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது .

திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

வாரத்தில் ஐந்து நாட்கள் பிசியாக வேலை செய்ய கூடிய மக்கள் வார இறுதி நாட்களில் தங்களின் பொழுதை போக்கவும் ரிலாக்ஸ் செய்யவும் மால்கள் பெரிய உதவியாக இருக்கின்றன. உணவகங்கள் ,ஷாப்பிங் செய்வதற்கான கடைகள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் மால்களுக்கு சென்று வருவது என்பது அவர்களின் வழக்கமான பணிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.

ஆனால் திருச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் மால் எதுவும் அங்கே கிடையாது . திருச்சியில் மால்கள் திறக்கப்படுமா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் மக்கள். இந்நிலையில் முதன்முறையாக திருச்சியில் பிரம்மாண்டமான மால் ஒன்று கட்டப்பட இருக்கிறது. அதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியுள்ளது.

Also Readஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் 3.9 லட்சம் சதுர அடி பரப்பளபில் ஷாப்பிங் மால் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு பாரத் மால் என பெயரிட்டு இருக்கிறார்கள். பாரத் குரூப் என்ற நிறுவனம் திருச்சியில் பாரத் மால் என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மாலை அமைக்க இருக்கிறது. திருச்சியில் மிகப்பெரிய மாலாக இது அமையும் என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு என்பது நிறைவேற போகிறது.

சென்னை திருச்சி பைபாஸ் என்ற முக்கியமான இடத்தில் அமைந்து இருப்பதால் திருச்சி நகர மக்கள் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இங்கே வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்வேறு பிரீமியம் பிராண்டுகளின் கடைகள் அனைத்தும் இந்த மாலில் அமைக்கப்பட இருக்கிறது .

Recommended For Youகோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!!

பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பொழுது போக்குவதற்கான இடங்கள் ,ஃபுட் கோர்ட், குழந்தைகளுக்கான ஃபன் சிட்டி, சினிமா தியேட்டர் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன. இனி விறு விறுப்பாக பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் டைனிங் , பொழுதுபோக்கு அனுபவங்கள் கிடைக்க உள்ளன. இந்த மால் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக போகிறது.

Share This Article English summary

Trichy gets its first Mall : Construction has officially begun for Bharath Mall

Construction has officially begun for Bharath Mall, Trichy’s first mall. A major step toward bringing world-class shopping, dining and entertainment to Trichy. Story first published: Sunday, November 16, 2025, 15:46 [IST] Other articles published on Nov 16, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *