லாக்கர்ல இருக்கும் நகைக்கு கூட பாதுகாப்பு இல்லை!! சென்னை வங்கியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 11:16 [IST] Share This Article
வேளச்சேரி, சென்னை: தங்க நகைகளை வீடுகளில் வைத்தால் பாதுகாப்பு இல்லை, திருட்டு பயம் இருக்கிறது என்பதற்காக தான் பலரும் தங்களின் நகைகளை வங்கி லாக்கர்களில் வைக்கின்றனர். வங்கி லாக்கரில் நகைகளை வைத்து விட்டால் அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் தேவைப்படும் போது எடுத்து கொள்ளலாம்.
குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், வயதானவர்கள் தங்களின் தங்க நகைகளை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர்களையே நம்புகின்றனர். இவ்வாறு நகைகளை பாதுகாக்க வங்கிகளுக்கு குறிப்பிட்ட கட்டணமும் செலுத்தப்படுகிறது. வங்கி லாக்கரில் இருக்கக்கூடிய நகைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என நாம் நிம்மதியாக இருந்துவிடலாம், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக லாக்கரிலிருந்து தங்கநகையை வங்கி மேலாளரே திருடிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது . சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வர கூடிய ஹெச்டிஎஃப்சி வங்கி கிளையில் மேலாளரே லாக்கரில் இருந்த தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேளச்சேரியை சேர்ந்த ஒரு பெண், அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நகைகளை வேளச்சேரியில் செயல்பட்டு வர கூடிய ஹெச்டிஎஃப்சி வங்கி கிளையில் ஒரு லாக்கரை திறந்து அதில் வைத்து பராமரித்து வந்துள்ளார். அமெரிக்காவில் இருப்பதால் தன்னுடைய லாக்கரை அணுகுவதற்கான உரிமங்களை வேளச்சேரியில் வசிக்கும் தன்னுடைய தாயாருக்கு வழங்கி இருக்கிறார்.

நீண்ட காலமாக வங்கி லாக்கரில் இருந்து நகைகளை இவர்கள் எடுத்து பயன்படுத்தவில்லை . இந்த சூழலில் அண்மையில் இவருடைய குடும்பத்தினர் வங்கி லாக்கரில் இருக்கும் நகையை எடுக்க சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கரில் இருந்த 238 கிராம் தங்கம் காணாமல் போயிருந்தது. வங்கியிடம் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லையாம். எனவே அவர்கள் சென்னை காவல்துறையின் மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தனர்.
Also Read
ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!
அந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் வங்கி மேலாளராக பணிபுரியும் நபரே இந்த லாக்கரிலிருந்து நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வங்கியில் மேலாளராகவும் குறிப்பிட்ட அந்த லாக்கருக்கு பொறுப்பாளராகவும் இருந்த நபரை கைது செய்தனர் .
தன்னுடைய அதிகாரத்தையும் உரிமையையும் பயன்படுத்தி லாக்கரில் இருந்த தங்கத்தை அவர் திருடி இருக்கிறார். இதனை அடுத்து அந்த தங்கத்தை ஒரு அடகு கடையில் கொடுத்து 21 லட்சம் ரூபாய்க்கு அவர் விற்பனை செய்திருக்கிறார் . காவல்துறையினர் வங்கியிலும் சென்று சோதனை நடத்தினர். அப்போது வங்கி ஆலோசனை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20.6 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.
Recommended For You
வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு
நகை அடகு கடையில் உருக்கப்பட்ட 188 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர் . தற்போது அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வங்கி லாக்கர்கள் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்புகிறது. குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி வங்கி லாக்கர்கள் கூட பாதுகாப்பு இல்லையா என சந்தேகிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
Share This Article English summary
Bank manager in Chennai arrested for stealing gold from NRI customer locker
Chennai police arrests a bank manager who stole the gold jewels from the NRI customer’s bank locker. Story first published: Sunday, November 16, 2025, 11:16 [IST] Other articles published on Nov 16, 2025
