திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

திருமண நிகழ்வில் நடனமாடிய  சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

  செய்திகள்

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

News oi-Devika Manivannan By Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற போது இருவரும் நடனமாடியுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Anil Shetty (@anilshetty87)

இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அரசியல்வாதியும் தொழில் முனைவோருமான அனில் ஷெட்டி, சுதாமூர்த்தி மற்றும் கிரன் மசூம்தர் ஷா ஆகிய இருவரோடும் நடனமாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னுடைய நடனத்தை கைவிடுங்கள் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்கள் எவ்வளவு எனர்ஜியோடு நடனம் ஆடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Also Readதேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!

அந்த வீடியோவில் இருவரும் இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனம் ஆடுகின்றனர், சுற்றி இருப்பவர்கள் அவர்களை ஆரவார படுத்துகின்றனர் . இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் . இவர் ராஜசபா எம்பி ஆகவும் இருக்கிறார் இவர் எழுதிய புத்தகங்களும் இவருடைய ஊக்கம் தரும் பேச்சுகளும் தற்கால இளைஞர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றவை.

Recommended For Youபீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!

கிரண் மசூம்தர் ஷாவின் சகோதரரின் மகனான எரிக் மசூம்தர் அமெரிக்காவில் கணினி மற்றும் கணிதம் சம்பந்தப்பட்ட அறிவியல் பாடப் பிரிவில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். இவருடைய திருமண வரவேற்பு நிகழ்வு தான் பெங்களூரின் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு உயர் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர் . குறிப்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் இதில் கலந்து கொண்டார்.

எரிக் மசூம்தர் ஷா பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். பொறியியல் , மெஷின் லேர்னிங் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்து வருகிறார்.

Share This Article English summary

Biocon founder Kiran Mazumdar Shaw and Sudha Murty’s joyfull dance is viral

Biocon founder Kiran Mazumdar Shaw and Rajya Sabha member Sudha Murty joyfully dancing together at a wedding ceremony goes viral in social media. Story first published: Friday, November 14, 2025, 17:26 [IST] Other articles published on Nov 14, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *