தங்கம் Vs வெள்ளி Vs பங்குகள்: எந்த முதலீடு வரும் ஆண்டில் சிறந்த லாபம் தரும்?
Personal Finance -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, November 14, 2025, 16:21 [IST] Share This Article
தங்கம், வெள்ளி மற்றும் பங்குச்சந்தைகள் அனைத்தும் அபாரமாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீடு செய்வது ஒரு தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பலவகை முதலீட்டு உத்திகள்தான் (multi-asset diversification) உண்மையான பலனைத் தரும் என்பது அவர்களின் கருத்து.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து வருவதும், பங்குகள் புதிய உச்சங்களை எட்டுவதும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும் முதலீட்டாளர்களைக் குழப்பமடையச் செய்துள்ளன. மேலும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? பணத்தை கையிருப்பாக வைக்கலாமா? அல்லது தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாறலாமா? போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.

சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போது முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, ஒரே ஒரு துறையை மட்டும் தேர்வு செய்ய முயற்சிப்பதுதான். அதற்குப் பதிலாக, பலவகை முதலீட்டு உத்திதான் ஏற்ற இறக்கமான சந்தையில் புத்திசாலித்தனமான அணுகுமுறை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
முதலீட்டு நிபுணர் அலோக் ஜெயின், இந்தியப் பங்குகள், அமெரிக்கப் பங்குகள், தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் (அல்லது கடன்) ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு விரிவான ஆய்வை வெளியிட்டார். அதில், “இன்று நான் எங்கு முதலீடு செய்ய வேண்டும்?” என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
“ஆனால் முதலீட்டாளர்கள் அனைத்தையும் ஒரே துறையில் குவிக்க முயற்சிக்கும் போதுதான் பிரச்சனை தொடங்குகிறது. அங்குதான் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள்,” என்று ஜெயின் கூறினார். இளம் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் “தற்போது சிறப்பாக செயல்படுவதை” மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.
இது அதிக விலையில் வாங்கி, சரிவின் போது பீதியடைந்து, தவிர்க்க முடியாத இழப்புகளைச் சந்திக்க வழிவகுக்கிறது. இதற்குப் பதிலாக, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, எளிமையான, பலவகை முதலீட்டுத் திட்டம் நீண்ட காலத்திற்கு அதிக வருமானத்தை அளிப்பதுடன், கவலை, ஏற்ற இறக்கம் மற்றும் உணர்ச்சிபூர்வமான முடிவெடுக்கும் தன்மையைக் கணிசமாகக் குறைக்கிறது என்று ஜெயின் வாதிடுகிறார்.
Also Read
தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!
அவரது 20 ஆண்டுகால ஆய்வானது, இதை உறுதிப்படுத்துகிறது. அக்டோபர் 2005 முதல் அக்டோபர் 2025 வரையிலான தரவுகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு துறையின் நீண்ட காலச் செயல்திறனை ஜெயின் ஒப்பிட்டார்:
தங்கம்: +1,666% (15.2% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் – CAGR)
வெள்ளி: +1,188% (13.6% CAGR)
இந்தியப் பங்குகள் (நிஃப்டி 50): +993% (12.6% CAGR)
அமெரிக்கப் பங்குகள் (INR இல் S&P 500): +980% (12.8% CAGR)
கடன் பத்திரம்: +307%
எனவே 25% இந்தியப் பங்குகள், 25% அமெரிக்கப் பங்குகள், 15% தங்கம், 15% வெள்ளி, 20% கடன் பத்திரம் என முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறார். தற்போதைய சூழ்நிலையில் – புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அழுத்தங்கள், ஏற்ற இறக்கமான பங்கு மதிப்பீடுகள் – ஆகியவை இருப்பதால் தங்கம், வெள்ளி அல்லது பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டுமா என்பது கேள்வி அல்ல எனகிறார்.
Recommended For You
மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..
ஒவ்வொரு சுழற்சியிலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ய உதவும் ஒரு திட்டத்தை உருவாக்க முடியுமா என்பதே உண்மையான கேள்வி. “சமநிலையில் தான் மந்திரம் உள்ளது,” என்று ஜெயின் முடிக்கிறார். “ஒரு துறையில் உள்ள பலவீனம் மற்றொன்றின் பலத்தால் ஈடுசெய்யப்படுகிறது. இந்த நிலைத்தன்மை உங்களை சந்தையில் வைத்திருக்கிறது. சந்தையில் நிலைத்திருப்பதே நீண்ட காலச் செல்வத்தை உருவாக்குகிறது” என்பதே அவரது பதிலாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Multi-Asset Diversification: A Smart Investment Strategy
Investment experts warn against focusing on a single asset class amid market volatility. Multi-asset diversification is recommended for long-term wealth accumulation and stability. Story first published: Friday, November 14, 2025, 16:21 [IST]