குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 10:12 [IST] Share This Article
திங்கட்கிழமை தொடங்கி சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை மூன்று நாட்கள் அதிகரித்திருக்கிறது, இரண்டு நாட்கள் குறைந்து இருக்கிறது.
சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாளே ஒரு கிராமுக்கு 220 ரூபாய் விலை உயர்ந்து 11,700 எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .இதனை அடுத்து புதன்கிழமை அன்று 100 ரூபாய் குறைந்த தங்கம் 11 ,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . வியாழக்கிழமையான நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 300 ரூபாய் என உயர்வு கண்டு 11,900 ரூபாய் என்றானது. இந்த மாதத்திலேயே ஏற்பட்ட அதிகபட்ச விலை உயர்வு இதுவாகும்.

இன்றும் தங்கம் விலை உயருமா என்ற அச்சம் நிலவிய நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்திருக்கிறது . ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து 11,840க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரனுக்கு 480 விலை குறைந்திருக்கிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் நேற்று 95 ,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 94,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன?
24 கேரட் தங்கம் விலை குறைந்திருக்கிறது .ஒரு கிராமுக்கு 66 ரூபாய் விலை சரிவடைந்து 12,916 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 528 ரூபாய் விலை குறைந்து 1,03,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 65 ரூபாய் விலை குறைந்து 9,875 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் விலை குறைந்து 79 ,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read
மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த திங்கட்கிழமை அன்று கிராம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 11,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2880 ரூபாயும் என விலை உயர்வு கண்டிருக்கிறது .
Recommended For You
2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!
வெள்ளி இன்றைய தினம் மூன்று ரூபாய் விலை குறைந்திருக்கிறது . நேற்று சென்னையில் வெள்ளி தடாலடியாக ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்தது . இன்று மூன்று ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 180 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1, 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Share This Article English summary
After a sudden increase gold rate today in Chennai sees a slight decline
After a sudden increase gold rate today in Chennai sees a slight decline. Let us check the gold & silver prices today. Story first published: Friday, November 14, 2025, 10:12 [IST] Other articles published on Nov 14, 2025
