சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 8:25 [IST] Share This Article
சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாக குறைக்கும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தை அறிமுகம் செய்தது.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வழி திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது .ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து தாமதம் அடைந்து இதுவரை கட்டுமான பணிகளே முடிவு பெறவில்லை. சுமார் 263 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து சென்னை பெங்களூரு இடையிலான போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் முடிவடைந்து பல இடங்களில் பயன்பாட்டுக்கே வந்துவிட்டன. அதே போல ஆந்திராவிலும் கிட்டதட்ட 80% பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இந்த பணிகள் தொடர்ந்து தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
Also Read
வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!
தமிழ்நாடு பகுதியில் சாலை பணிகள் சட்ட சிக்கல்களில் சிக்கியிருப்பதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் இடையிலான 25 கிலோமீட்டர் நீள சாலையில் ஒப்பந்ததாரருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே நீடித்து வரக்கூடிய சிக்கல்தான் இந்த பகுதியில் சாலை பணிகளின் மேலும் தாமதப்படுத்துகிறது . ஒப்பந்ததாரர் சாம்பல் கொள்முதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். உயர் நீதிமன்றம் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தால் மட்டுமே மீதமுள்ள 14 கிலோமீட்டர் தொலைவிற்கான பணிகள் முடிக்கப்படும்.

இந்த சாலை பணிகள் முடிந்தால் தான் சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே முழுமையாக பயன்பாட்டுக்கு வர முடியும். அதேபோல வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம் வரையிலான 24.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் குறிப்பிட்ட பகுதியில் பாலம் கட்டமைக்கும் பணிகளும் எதிர்பார்த்த தேதிக்குள் முடிக்கப்படவில்லை. இதற்கு சில ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 94 கிலோ மீட்டர் தூரம் சாலை என்பது இருக்கிறது . இதில் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகள் தயாராகிவிட்டன. சில பகுதிகளில் கட்டுமான பணிக்காக பயன்படுத்தப்படக்கூடிய சாம்பலை கொள்முதல் செய்வதில் சிக்கல் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இடைத்தரகர்களால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் நேரடியாகவே தங்களையே கொள்முதல் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றனர்.
Recommended For You
2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!
இதற்கிடையே அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையிலான சாலை பணி மார்ச் 2026க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தற்போது ஜூலை வரை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது . காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான கட்டுமான பணி இந்த டிசம்பர் மாதமே முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் 6 கிலோமீட்டர் நீள சாலை பணிகள் நிலுவையில் உள்ளன .
கர்நாடகாவில் 71 கிலோமீட்டர் தூர பகுதி 2024 டிசம்பரிலேயே முடிக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. ஆந்திராவில் 85 கிலோ மீட்டர் தூரத்தில் 68 கிலோமீட்டர் தூரம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
Share This Article English summary
Why Chennai–Bengaluru expressway is still stuck in legal mess in Tamilnadu
Chennai–Bengaluru expressway, launched in 2019, is far from completion. Initially scheduled for 2023, it now faces a long delay, with progress stalled on several stretches in Tamilnadu. Story first published: Friday, November 14, 2025, 8:25 [IST] Other articles published on Nov 14, 2025