Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

exportf-1763034874

  செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Share This Article

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்..ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு

மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்குவதற்காக 20,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்திருக்கிறது .அதாவது அடமானம் இல்லாத கடன் உதவிகளாக இந்த தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஏற்றுமதி துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ஏற்றுமதியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டத்தில் எம்எஸ்எம்இ உட்பட தகுதி உள்ள அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் 20,000 கோடி ரூபாய் வரை கூடுதல் கடன் வசதிக்காக ஒதுக்கியுள்ளது.

Also Readவீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

இவ்வாறு அடமானம் இல்லாமல் கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்கத்தை இது வலுப்படுத்தும். மேலும் புதிய சந்தைகளில் அவர்கள் கால் பதிக்க உதவும் என சொல்லப்படுகிறது. மத்திய அரசின் ஏற்றுமதியாளர்களுக்கான இந்த கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் 100% உத்தரவாத கவரேஜ் உடன் 50 கோடி ரூபாய் வரை கூடுதலாக கடன் கிடைக்கும்.

அதாவது தகுதிவாய்ந்த ஏற்றுமதி நிறுவனம் 50 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம் என சொல்லப்படுகிறது. நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதியாளர்கள் அனைவருக்குமே இந்த கூடுதல் கடன் அவர்களுக்கான மூலதன தொகையாக மாறும். எனவே அவர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக மற்ற சந்தைகளில் கால் பதிக்க முடியும்.

Recommended For Youமின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது?மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது?

2026 மார்ச் 31ஆம் தேதி வரை அல்லது 20000 கோடி ரூபாய் கடன் முழுவதுமாக வழங்கப்படும் வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். ஒவ்வொரு கடனும் நான்காண்டு காலம் அவகாசத்தை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வங்கிகள் நிதி நிறுவனங்கள் இந்த கடன்களை வழங்கலாம் .

ஏற்றுமதியாளர்கள் புதிதாக எந்த சொத்துக்களையும் அடமானம் வைக்காமல் ஏற்கனவே வங்கிகளில் வைத்த பிணயத்திற்கு இந்த கூடுதல் தொகையை கடனாக பெற முடியும். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஜவுளி ,தோல் ,ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள் ,கடல்சார் பொருட்கள் போன்ற துறைகளில் இயங்கும் நிறுவனங்ளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Share This Article English summary

Exporters can avail Rs.50 crore without any new collateral under new scheme

Report says that The government’s Credit Guarantee Scheme for Exporters (CGSE) may offer up to Rs 50 crore per borrower in additional working capital . Story first published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Other articles published on Nov 13, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *