Breaking: 2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!

gold-2025-11-13t132818-220-1763020786

  செய்திகள்

2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!

News oi-Devika Manivannan By Published: Thursday, November 13, 2025, 13:32 [IST] Share This Article

2025 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறை காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த வருமானம் இந்த ஆண்டு கிடைத்தது. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல பெரிய அளவில் உயர்வு காணுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதற்கு கேடியா அட்வைசரி நிறுவனத்தின் தலைவரான அஜய் கேடியா பதில் அளித்திருக்கிறார்.

தற்போது தங்கம் வாங்குவதற்கு சிறந்த தருணமா, 2025 ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை 50%க்கு மேல் உயருமா, தங்கத்தை நகையாக வாங்கலாமா அல்லது ஈடிஎஃப்பில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து அவர் விரிவான பதில் அளித்துள்ளார்.

2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!

2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்தது பின்னர் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்தனர்,இதனால் விலை குறைந்தது தற்போது மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது ,இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பார்கள் அப்போது தங்கத்தின் விலை குறையும் எனக் கூறுகிறார். தங்கம் 50 சதவீதத்திற்கும் மேலான லாபத்தை இந்த ஆண்டிலேயே வழங்கி விட்டது ஆனால் தங்கத்தின் விலை இன்னும் திருத்தம் அடையும் என்றுதான் நான் நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவுக்கு விற்கப்படுகிறது?

தற்போது முதலீடு செய்யலாம் என கருதாமல் சற்று காத்திருக்கலாம் என கூறுகிறார். தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் புவிசார் பதட்டங்கள், வர்த்தக மோதல்கள் உள்ளிட்டவை தற்போது தணிந்துள்ளன எனக் கூறும் அவர் 2025 ஆம் ஆண்டு போன்ற ஒரு உயர்வு 2026 இல் இருக்கும் என சொல்ல முடியாது என தெரிவிக்கிறார் .

Also Read2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

அதே வேளையில் வெள்ளியின் விலை நிச்சயமாக உயரும் என கூறுகிறார். ஏனெனில் தொழில்துறை ரீதியாக வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு வெள்ளி நம்மிடம் இல்லை எனவே டிமாண்ட் அதிகரித்து அதன் விலை நிச்சயமாக அதிகரிக்கும். எனவே வெள்ளியின் விலை 2026 இல் உயரும் எனக் கூறுகிறார். மேலும் தங்கத்தை கடந்து மற்ற முதலீடுகள் தற்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன அவற்றை நோக்கி மக்கள் செல்ல வேண்டும் என்கிறார்.

தங்கம் ஏற்கனவே தன்னுடைய உச்சத்தை அடைந்து விட்டது இனி அது சில காலத்திற்கு திருத்தத்தில்தான் இருக்கும் எனவே தங்கம் விலை திருத்தம் அடைந்த பிறகு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்அதைவிட மாற்று முதலீடாக பங்குகள் இருக்கின்றன அவை தற்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பதால் அதில் முதலீடு செய்யுங்கள் என கூறுகிறார்.

Recommended For You45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

ஒருவேளை உங்களுடைய வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகள் இருக்கின்றன கட்டாயமாக தங்கம் ,வெள்ளி வாங்க வேண்டும் என்றால் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் முதலீடு செய்கிற நோக்கத்தில் இருந்தால் சிறிது காலம் காத்திருங்கள் என கூறுகிறார். 2026இல் தங்கத்தின் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திலேயே இருக்கும் என கூறும் அவர் , வெள்ளி நிச்சயமாக 15% வரை வளர்ச்சி அடையும் என கணிக்கிறார். அமெரிக்கா, சீனா எடுக்க கூடிய முடிவுகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

Share This Article English summary

Gold & silver price outlook for 2026: Ajay Kedia says silver will shine more than gold

Kedia advisory director Ajay Kedia explains that the returns on gold and silver in 2026 are expected to slow down compared to recent years. Story first published: Thursday, November 13, 2025, 13:32 [IST] Other articles published on Nov 13, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *