ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:55 [IST] Share This Article
இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமாக மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் இருக்கிறது. மகேந்திரா நிறுவனம் தன்னுடைய தனித்துவமான வாகனங்களுக்கும் , தயாரிப்புகளுக்கும் பெயர் போனது.
மகேந்திரா நிறுவன கார்களை பயன்படுத்துவதே ஒரு தனி கெத்து என மக்கள் எண்ணக் கூடிய அளவில் தனித்துவம் கொண்டதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருந்து வருகின்றன. சிறந்த மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களுக்கு தரமான அனுபவம் என இந்தியர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது இந்த நிறுவனம். மகேந்திரா& மகேந்திரா நிறுவனம் வாகன உற்பத்தி விற்பனை மட்டும் இல்லாமல் தற்போது புதிதாகவும் ஒரு துறையில் கால் பதிக்க இருக்கிறது.

கனடா நாட்டை சேர்ந்த மனுலைஃப் நிறுவனத்தோடு இணைந்து மஹிந்திரா & மஹிந்திரா இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் இந்த கூட்டு நிறுவனம் செயல்படும் என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் மனுலைஃப் நிறுவனமும் விண்ணப்பம் செய்துள்ளன.
இந்தியாவில் காப்பீட்டு துறை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் காப்பீட்டு திட்டங்களை பெற முன் வருகிறார்கள். மத்திய அரசும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
Also Read
2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!
இந்திய மக்கள் மத்தியில் காப்பீடு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு அண்மை காலமாக அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவில் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள துறையாக காப்பீட்டு துறை இருக்கிறது. இந்த சமயத்தில் காப்பீட்டு துறையில் களமிறங்குவது சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும் தலா 3600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன. முதல் கட்டமாக முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தள 1250 கோடி ரூபாயை முதலீடு செய்வது என ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இந்த கூட்டு நிறுவனம் அமைப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் காப்பீடு திட்டங்களை வழங்குவதற்கான உரிமம் கோரி இந்த நிறுவனம் விண்ணப்பம் செய்யும். இதனை அடுத்து காப்பீடு தயாரிப்புகளை வழங்கப்படும் . ஏற்கனவே மஹிந்திரா & மஹிந்திராமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும், கனடாவின் மனுலைஃப் நிறுவனமும் 2020ஆம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் தற்போது காப்பீடு துறையிலும் களம் இறங்கி இருக்கின்றன.
Recommended For You
இனி ஆதார் கார்டே தேவையில்லை.. இந்த ஒரு செயலி உங்க போன்ல இருந்தாலே போதும்..!!
குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளை குறி வைத்து இந்த நிறுவனம் செயல்படும் என சொல்லப்படுகிறது. மகேந்திரா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அனுஷா இந்தியாவில் வாடிக்கையாளரை மையமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு காப்பீட்டு நிறுவனமாக இந்த கூட்டு நிறுவனம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மனு லைஃப் தங்கள் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்தில் இது முக்கியமான மைல்கள் எனக் கூறியிருக்கிறார்.
Share This Article English summary
Mahindra & Mahindra to enter life insurance business, joint venture with Manulife
Mahindra & Mahindra and Manulife joined hands to establish a 50:50 life insurance joint venture, subject to regulatory approval, strengthening their existing footprint in India. Story first published: Thursday, November 13, 2025, 10:55 [IST] Other articles published on Nov 13, 2025
