உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! – Allmaa

உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!! – Allmaa

  செய்திகள்

உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, November 12, 2025, 14:40 [IST] Share This Article

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் தயாரிப்புகள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாக இருக்கிறது . ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக்கூடிய எந்த ஒரு தயாரிப்புகளாக இருந்தாலும் அந்த பிராண்டின் பெயருக்காகவே அதனை வாங்கக்கூடிய நபர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் .

இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனம் ஜப்பானை ஒரு பேஷன் நிறுவனமான இசே மியாகியுடன் இணைந்து ஐபோன் பாக்கெட் என்ற ஒரு புதிய தயாரிப்பை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு பை. இது இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஜோல்னா பைகளின் மினி வெர்சன் என கூறலாம்.

உங்க ஊர்ல தான் இது ஐபோன் பாக்கெட்.. எங்க ஊர்ல இதுக்கு பேர் ஜோல்னா பை!! கிண்டலுக்கு ஆளாகும் ஆப்பிள்!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்ற பெயரில் இதனை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதில் ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதை கைகளிலும் , தோள்களிலும் மாட்டிக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. A piece of a cloth என்ற கான்செப்டின் அடிப்படையில் இந்த ஐபோன் பாக்கெட்டை உருவாக்கி இருப்பதாகவும் நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய கைவினை கலையையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஐபோன் பாக்கெட்டை அறிமுகம் செய்திருப்பதாக தெரிவிக்கிறது .

இந்த ஐபோன் பாக்கெட்டில் இரண்டு விதம் உள்ளது. இதில் iphone pocket short strap version, அதாவது கையில் மட்டுமே மாட்டி கொள்ளும் வசதி கொண்ட இந்த ஐபோன் பாக்கெட் விலை 150 டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில் 13,300 ரூபாய் ஆகும், அதே போல Iphone pocket crossbody version இது சற்று நீளமானது. இதன் விலை 250 டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது .

இதனை ஆப்பிள் நேரடி விற்பனை கடைகள் மற்றும் ஆப்பிள் இணையதளம் வாயிலாக வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது . ஆப்பிள் நிறுவனம் தாங்கள் எதை அறிமுகம் செய்தாலும் மக்கள் வாங்கி விடுவார்கள் என்று எண்ணுகிறதா, ஆப்பிள் ரசிகர்கள் தற்போது இதைக் கூட போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள் என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர் .

Also Readஇது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!!இது என்னப்பா Safety Pin-க்கு வந்த வாழ்வு..! செம பிஸ்னஸ் ஐடியாவா இருக்கே!!

தாங்கள் எதை அறிமுகம் செய்தாலும் அதை வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்கள் இதைக் கூட இவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார்கள் என தெரிவித்துள்ளார். ஒரு பயனர் டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் போது ஆப்பிள் மட்டும் எதை கண்டுபிடித்திருக்கிறது பாருங்கள் என ஒரு நபர் கலாய்த்துள்ளார்.

Share This Article English summary

Apple introduces iphone pocket for rs 20,379 – Netizens are amused

Apple has released a new, high-fashion accessory called the iPhone Pocket, a knitted pouch developed in collaboration with Issey Miyake, a Japanese fashion designer, it is priced at Rs 20,379 Story first published: Wednesday, November 12, 2025, 14:40 [IST] Other articles published on Nov 12, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *