டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

  செய்திகள்

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

News oi-Devika Manivannan By Published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Share This Article

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. காவல்துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. செங்கோட்டை பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லை என்றால் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

இந்த சம்பவத்தில் ஒரு போன் கால் வந்ததால் ஓட்டுநர் ஒருவர் உயிர் தப்பி இருக்கிறார். பவானி சங்கர் சர்மா என்பவர் டெல்லியில் டாக்ஸி ஓட்டி வருபவர். சம்பவம் நிகழ்ந்த அந்த சமயத்தில் அவர் செங்கோட்டை அருகே தன்னுடைய டாக்ஸியை நிறுத்திவிட்டு சவாரிக்காக காத்திருந்தாராம். அந்த சமயத்தில் அவர் காரில் தான் அமர்ந்திருக்கிறார். அவருக்கு திடீரென ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது சிக்னல் கிடைக்காததால் காரில் இருந்து இறங்கி சற்று தூரம் தள்ளி நின்று பேசி இருந்திருக்கிறார் அப்போது தான் பயங்கர வெடி சத்தத்தோடு கார் வெடித்து சிதறியது.

Also Readடெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!

பவானி சங்கர் சர்மாவின் கார் இந்த சம்பவத்தில் சிக்கி முற்றிலுமாக எரிந்து நாசமாகி இருக்கிறது. லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார். போன் பேச காரைவிட்டு இறங்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தன்னுடைய உயிர் போயிருக்கும் என அவர் தெரிவிக்கிறார்.

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

செங்கோட்டை பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக வந்த ஆட்டோ ஓட்டுனரான மண்டல் என்பவரும் இந்த கார் வெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளை ஏற்றுவதற்காக 40 வயதான மண்டல் என்பவர் காத்திருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அவர் மயங்கி விழுந்துள்ளார், சுயநினைவு வந்து பார்த்த போது தன்னுடைய வயிற்றில் இரும்பு கம்பி குத்தி ரத்தம் வந்ததையும் கார் வெடித்து வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததையும் பார்த்துள்ளார்.

உடனடியாக எதையும் யோசிக்காமல் ரத்தம் சிந்த சிந்த தன்னுடைய ஆட்டோவை இயக்கி 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சயினி என்பவர் பயணிகளை இறக்கி விட்டு காத்திருந்த போது கார் வெடிப்பில் சிக்கி இறந்துவிட்டார்.

Recommended For Youசெங்கோட்டை குண்டுவெடிப்பு.. தீவிரவாத தாக்குதலா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா பரபரப்பு விளக்கம்..!!செங்கோட்டை குண்டுவெடிப்பு.. தீவிரவாத தாக்குதலா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா பரபரப்பு விளக்கம்..!!

டெல்லி போக்குவரத்து துறையில் நடத்துநராக பணியாற்றி வந்த அசோக் என்பவர் தன்னுடைய நண்பரை பார்ப்பதற்காக வந்த இடத்தில் கார் வெடிப்பில் சிக்கி இறந்துவிட்டார். இவருடைய மனைவியும் 4 பிள்ளைகளையும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து நிற்கின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து தன்னுடைய காஸ்மெடிக்ஸ் கடைக்கு சரக்குகளை வாங்க வந்த வியாபாரி ஒருவரும் இறந்துவிட்டார்.

Share This Article English summary

How a Phone call saved a taxi driver from the Delhi car blast?

Delhi car blast has shattered many dreams , only few have turned to be lucky as a phone saved a taxi driver from the blast. Story first published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Other articles published on Nov 11, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *