சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ்

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..!

Personal Finance oi-Devika Manivannan By Published: Monday, November 10, 2025, 13:54 [IST] Share This Article

சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவு . இந்த கனவை நோக்கி தான் அனைவரும் பயணம் செய்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து கடன் வாங்கி அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கிறோம்.

நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய சொந்த வீட்டை வாங்கும் போது நாம் பல்வேறு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் சொந்தமாக வீடு அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகிறீர்கள் எனும் போது முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர் . ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் பிசினஸ் டுடேவிற்கு அளித்துள்ள பேட்டியில் நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க முடிவு செய்தால் முதலில் என்ன கவனிக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..!

வீட்டின் அளவு, கார்பெட் ஏரியா உள்ளிட்டவற்றை தவிர்த்து முதலில் கவனிக்க வேண்டியது பார்க்கிங் எனப்படும் வாகன நிறுத்துமிடம் என கூறுகிறார். நீங்கள் வீடு வாங்கும் பகுதி நீண்ட கால அடிப்படையில் நல்ல வளர்ச்சி அடையும் பகுதியா இல்லையா என்பதை வாகன நிறுத்துமிடம் தொடர்பான தகவல்களே சொல்லிவிடும் என்கிறார்.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை என்ன?

அதாவது ஒரு பகுதி ஏற்கனவே வளர்ச்சி அடைந்துவிட்டது என்றால் அங்கே வீடு கட்ட கூடிய பில்டர்கள் இலவசமாகவே வாகன நிறுத்துமிடங்களை வழங்குவார்கள், இங்கே முதலீடு அடிப்படையில் வீடு வாங்கும் நபர்களே அதிகமாக இருப்பார்கள், அவர்கள் குறுகிய காலத்திலேயே வீட்டை விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் என விளக்கம் தருகிறார். இங்கே வீடு வாடகை டிமாண்டும் குறைவாகவே இருக்கும் இது தான் சமகால ரியல் எஸ்டேட் நிலவரம் என்கிறார்.

இதுவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்துமிடத்தை வாங்க போட்டி இருக்கிறது என்றால் நீண்ட கால அடிப்படையில் அங்கே தங்கும் நோக்கில் பலரும் வீடு வாங்குகிறார்கள் என அர்த்தம். அப்படி என்றால் நிச்சயம் அந்த பகுதி நல்ல வளர்ச்சி அடையும் என உறுதியாக கூறுகிறார். அந்த பகுதியை சுற்றி உள்கட்டமைப்பு பணிகளும் அதிகம் நடக்கும் என தெரிவிக்கும் அவர் வாகன நிறுத்துமிடத்திற்கான டிமாண்ட் தான் நவீன ரியல் எஸ்டேட் வளர்ச்சியின் குறிகாட்டி என்கிறார்.

Also Read45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

எனவே புது வீடு வாங்கும் முடிவில் இருப்பவர்கள் அங்கே மூடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் எவ்வளவு வாங்கப்படுகிறது, எந்த வகை கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளுடன் அது கட்டப்பட்டுள்ளது என பார்க்க வேண்டும் என கூறுகிறார். பார்க்கிங் இடத்திற்கு டிமாண்ட் இருந்தால் அந்த பகுதியில் நீண்டகால முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என அர்த்தம் என்கிறார்.

Share This Article English summary

Buying a new apartment? – First check the Parking lot demand says advisor

While buying a new apartment, buyers must check the demand for Parking lots, real estate advisor reveals the top secret. Story first published: Monday, November 10, 2025, 13:54 [IST] Other articles published on Nov 10, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *