45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

  செய்திகள்

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

News oi-Devika Manivannan By Published: Monday, November 10, 2025, 12:17 [IST] Share This Article

2025 ஆம் ஆண்டில் அதிகமானவர்கள் பயன்படுத்திய வார்த்தை தங்கம். 2025 ஆம் ஆண்டு எந்த பொருளுக்கு சொந்தமான ஆண்டு என கேட்டால் நிச்சயமாக தங்கம் என கூறலாம் . அந்த அளவிற்கு எந்த ஆண்டிலும் இல்லாத அளவு தங்கத்தின் விலை இந்த ஆண்டில் பல வரலாறு காணாத உச்சங்களை எட்டியது.

குறிப்பாக குறுகிய காலத்தில் தங்கம் ஜெட் வேகத்தில் விலை உயர்வு கண்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வு கண்டது. இந்த ஆண்டு தங்கம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்கப் போகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து தற்போது வரையிலான இந்த 10 மாத காலத்தில் மட்டும் உலக அளவில் தங்கத்தின் விலை சராசரியாக 50 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. தற்போது தங்கம் விலை வரலாறு உச்சத்தில் இருந்து சரிவடைந்து வர்த்தகமாகி வருகிறது. இருந்தாலும் 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டில் தான் தங்கம் விலை 50% வளர்ச்சியை எட்டி இருக்கிறது என ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் பிரதமேஷ் மல்லையா தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சி காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு, உலக பொருளாதார நிலையற்ற தன்மை, உயர் பணவீக்கம் என பெரிய பிரச்சினை ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தங்கம் விலை 1979ஆம் ஆண்டில் 120% வளர்ச்சி அடைந்தது. இதன் பின்னர் ஆண்டுக்கு 20% என வளர்ச்சி அடைந்த தங்கம், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50% வளர்ச்சி கண்டுள்ளது.

தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது, கூடிய விரைவில் அது ஏறு முகத்தை நோக்கி திரும்ப போகிறது என அவர் கூறியிருக்கிறார். இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,069 டாலராக வர்த்தகமாகி வருகிறது இன்றைய தினம் 1.75 சதவீதம் என தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இதே போல வெள்ளியின் விலையும் 2 சதவீதம் உயர்வு கண்டு ஒரு அவுன்ஸ் வெள்ளி 49.48 டாலர்கள் என வர்த்தகமாகி வருகிறது.

Also Read2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

அமெரிக்கா அரசின் பணவீக்க விகிதம், அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை உள்ளவை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்துதான் மேற்கொண்டு தங்கத்தின் விலை ஏறமுகத்தில் இருக்குமா என்பதை முடிவு செய்ய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே வெள்ளியின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசாங்கம் தன்னுடைய கிரிட்டிகல் மினரல்ஸ் பட்டியலில் தற்போது வெள்ளியையும் இணைத்துள்ளது.

Recommended For Youடிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

தற்போது தங்கம் விலை திருத்ததில் இருக்கும் நிலையில் நீண்ட கால நோக்கத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தருணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். டெக்னிக்கல் ஆய்வுகளின் படி பார்க்கும்போது தற்போது தங்கத்தின் விலை திருத்தத்தில் இருப்பதாகவும் விரைவில் அது வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பப் போகிறது என்றும் ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் கிரிஸ்டோபர் உட் தெரிவித்திருக்கிறார்.

Share This Article English summary

Gold rate poised for biggest annual gain since 1979 Amid Global Volatility

Gold is on track for its biggest annual gain since 1979, according to market experts. The rate has already gained over 50% this year. Story first published: Monday, November 10, 2025, 12:17 [IST] Other articles published on Nov 10, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *