நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 11:11 [IST] Share This Article
உலக அளவில் பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ஐடி துறை மந்தமாக இருப்பது , ஏஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன.
டிசிஎஸ் ,அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கு அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை தான், உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் தங்கள் நிறுவனத்தின் மனித வள துறை அதிகாரிகள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பாக தலைமை செயல் அதிகாரிக்கும் சேர்த்து டெர்மினேஷன் கடிதத்தை அனுப்பினார்கள் என கூறியுள்ளார். என்னது தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் கடிதமா என பலரும் இந்த பதிவை வியந்து படித்து வருகின்றனர்.
தலைமை செயல் அதிகாரி மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஹெச்.ஆர் தரப்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யக்கூடிய கடைசி நாள் இதுதான் என இருந்ததாம். அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்ய பயன்படுத்த கூடிய மென்பொருளும் அந்த மின்னஞ்சல் வந்த பிறகு அப்படியே நின்று போய் விட்டதாம். இதனை அடுத்து பலரும் அவ்வளவுதான் என தங்களின் பொருட்களை பேக் செய்ய தொடங்கியுள்ளனர் .
Also Read
AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..!
அந்த சமயத்தில் தான் நிறுவனத்தின் ஐடி துறை ஊழியர்கள் யாரும் வேலை விட்டு நீக்கப்படவில்லை, தயவு செய்து பதற்றம் அடையாதீர்கள் நம் நிறுவனத்தில் புதிதாக ஒரு தானியங்கி கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதனை பரிசோதனை செய்து பார்த்தோம் என கூறி இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே மின்னஞ்சலை அனுப்புவது தொடர்பான ஒரு ஆட்டோமேஷன் செயலியை பரிசோதனை செய்து பார்த்ததாக விளக்கம் தந்திருக்கும் ஹெச்.ஆர். யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என கூறியுள்ளது.
Recommended For You
AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?
மின்னஞ்சலில் டெஸ்ட் மோட் என குறிப்பிடாமல் அனுப்பியதே பிரச்சினைக்கு காரணம் என கூறி இருக்கும் ஹெச்.ஆர் யாரும் பதற்றம் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளது. இந்த பதிவு ரெடிட் பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மின்னஞ்சல் பரிசோதனை செய்ததில் தவறில்லை அதற்காக பணிநீக்க மின்னஞ்சலையா பரிசோதனை செய்வீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
Share This Article English summary
HR sends termination letter to all the employees, including the CEO
A social media user shared a bizarre office incident when the human resources (HR) department sent a letter of “termination” to all the employees, including the CEO. Story first published: Monday, November 10, 2025, 11:11 [IST] Other articles published on Nov 10, 2025