டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

  பர்சனல் பைனான்ஸ்

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

Personal Finance oi-Devika Manivannan By Published: Monday, November 10, 2025, 8:28 [IST] Share This Article

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் மக்களிடையே அதிகரித்தது . தங்கத்தை நகையாக வாங்குவதற்கு மாற்றாக பலரும் டிஜிட்டல் , கோல்ட் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தனர். இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு தங்க முதலீடாக டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.

டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன?: டிஜிட்டல் தங்கம் என்பது , தங்கத்தை டிஜிட்டல் முறையில் அதாவது மெய்நிகர் வடிவில் வாங்குவது. தங்கத்தை நாம் வாங்கி நம் வீடுகளிலோ வங்கிகளிலோ சேமித்து வைத்து பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வழக்கமாக நாம் தங்கத்தை எப்படி வாங்குவோமோ அப்படியே இதையும் வாங்கலாம். தேவைப்படும்போது விற்பனை செய்யலாம். 2012- 2013 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன .

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

எப்படி செயல்படுகிறது?: முதலில் இறக்குமதியாளர்கள் தங்கத்தை வாங்கி தங்களுடைய பெட்டகங்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். இதனை அடுத்து விநியோகஸ்தர்கள் (போன்பே, பேடிஎம், எம்எம்டிசி) டிஜிட்டல் தங்கம் திட்ட தயாரிப்புகளை நமக்கு வழங்குவார்கள். 24 கேரட் மற்றும் 99.9 சதவீத தூய்மை கொண்ட தங்கம் தான் டிஜிட்டல் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த பிஏஎம் பிஎஸ்ஏ நிறுவனமும் மத்திய அரசுக்கு சொந்தமான எம்எம்டிசி லிமிடெட் நிறுவனமும் தான் டிஜிட்டல் தங்கம் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் தங்கத்தை நாம் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற தளங்கள் வாயிலாக கூட வாங்க முடியும். தங்க நகை விற்பனை செய்யக்கூடிய ஜோஸ் ஆலுகாஸ், தனிஸ்க் போன்ற நிறுவனங்களும் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.

எவ்வளவு முதலீடு: இந்த ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது . இதனால் டிஜிட்டல் கோல்டு முதலீடுகளும் உயர்ந்துள்ளது. என்பிசிஐ அமைப்பு தரவுகளின் படி, ஜனவரி மாதத்தில் 762 கோடி ரூபாய்க்கு யுபிஐ மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கபட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தில் அது 85 சதவீதம் அதிகரித்து 1410 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

Also Readதங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் - வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

டிஜிட்டல் தங்கம் சாதக, பாதகங்கள்: தங்கத்தை வாங்கி நாம் சேமித்து வீட்டில் வைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை 1 ரூபாயிலிருந்து கூட நாம் தங்கத்தை வாங்க முடியும். 24 மணி நேரமும் இதனை நீங்கள் வாங்கலாம் விற்கலாம். இதை நீங்கள் வேண்டுமென்றால் பிசிகல் கோல்டாக மாற்றிக் கொள்ளலாம் இல்லையென்றால் விற்பனை செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம் இல்லை. இதில் பேமெண்ட் கேட் வே கட்டணம் மற்றும் குறிப்பிட்ட சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

செபி எச்சரிக்கை ஏன்: செபியை பொறுத்தவரை இந்தியாவில் அதிகமானவர்கள் டிஜிட்டல் சங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய சூழலில் முதலீட்டாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் தன்னுடைய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. சில டிஜிட்டல் தளங்கள் டிஜிட்டல் கோல்டு முதலீடு தொடர்பாக விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்து வருவது குறித்து எங்களுக்கு எங்களுடைய கவனத்திற்கு வந்தது என செபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் நாங்கள் கூற விரும்புவது டிஜிட்டல் கோல்டு தயாரிப்புகள் செபி ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க முதலீட்டு திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை இவற்றை செபி பத்திரங்களாகவோ அல்லது டெரிவேட்டிவ்களாகவோ குறிப்பிடவில்லை , செபியின் கட்டுப்பாட்டு எல்லைக்கு முற்றிலும் வெளியில் தான் இவை செயல்படுகின்றன. எனவே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்களுக்கு அதற்கே உரிய அபாயங்கள் உள்ளன என தெரிவிக்கிறது.

Recommended For You2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

முதலீட்டாளர்கள் செபி ஒழுங்குபடுத்தக்கூடிய கோல்ட் ஈடிஎஃப் , எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கூறியிருக்கிறது . டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்பதால் ஏதேனும் மோசடி நடக்கும்போது உங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்காது என்பதே செபி கூறும் எச்சரிக்கை. செபியின் எச்சரிக்கையையும் மீறி நான் டிஜிட்டல் கோல்டில் தான் முதலீடு செய்ய போகிறேன் என கூறும் நபர்கள் புகழ்பெற்ற நிறுவனங்கள் பாரம்பரியமாக வரலாறு கொண்ட நிறுவனங்களை தேடி முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share This Article English summary

Digital Gold investments are safe or not: why SEBI issues caution?

SEBI has warned invsetors against digital gold investments. Here is what SEBI tries to say and what investors should do at this moment? Story first published: Monday, November 10, 2025, 8:28 [IST] Other articles published on Nov 10, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *