Breaking: MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

Breaking: MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

  எம்.எஸ்.எம்.இ

MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

Msme oi-Goodreturns Staff By Published: Sunday, November 9, 2025, 15:05 [IST] Share This Article

தமிழ்நாட்டில் டிவிஎஸ் குழுமம் தொடங்கி பல குடும்பங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், ஆரம்ப காலத்தில் சிறு வணிகங்களாகவே தொடங்கப்பட்டு, தற்போது பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அதில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், நல்லி சில்க்ஸ், ஹட்சன் அக்ரோ, கேவின்கேர், பிஜிபி குழுமம், ஜோஹோ கார்ப்பரேஷன், ஜஸ்ட் டயல், ஹோட்டல் சரவணபவன், விஜிபி குழுமம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

T.V சுந்தரம் – டிவிஎஸ் குழுமம்!
இந்தியாவின் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க வணிக குழுமங்களில் ஒன்றாக டிவிஎஸ் (TVS) குழுமத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு மேலானது. இதை T.V சுந்தரம் ஐயங்கார் ஒரு சிறிய போக்குவரத்து சேவையாகக் தொடங்கி, இன்று பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது. கடந்த 1911ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மதுரையில் நிறுவப்பட்டது. T.V சுந்தரம் ஒரு வழக்கறிஞராவர். இந்திய ரயில்வேயிலும், வங்கியிலும் பணியாற்றியவர். ஆனால் தனது பாரம்பரிய பாதையை தவிர்த்து, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணமாகவும் இருந்தது. இதன் காரணமாக முதன் முதலாக தென் இந்தியாவின் முதல் கிராமப்புற பேருந்து சேவையை மதுரையில் தொடங்கினார். இதுவே டிவிஎஸ் நிறுவனத்தின் ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது.

MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

1929 வாக்கில் டிவிஎஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரி பாகங்களுக்கும் நேரடி ஏஜென்சி உரிமையை பெற்று, வாகன விற்பனையில் முக்கிய பங்கு வகித்தது.

அதன் பிறகு 1930 – 1960 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் போது, பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டதால், கார்கள் மற்றும் லார்களில் பொருத்தக் கூடிய சிறிய கரிவாயு ஆலையை வடிவமைத்தார். இது எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க உதவிய ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். இது எந்த பிரச்சனை வந்தாலும், அதை சமாளிக்க கூடிய திறனையே காட்டுகிறது.

TVS – டிரஸ்ட், வேல்யூ, சர்வீஸ்
டிவிஎஸ் என்ற பெயர் T.V.Sundaram என்ற பெயரில் இருந்து வந்ததாக இருந்தாலும், Trust, Value. Service எனும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பிறகு டிவிஎஸ் நிறுவனம் தொடங்கிய எல்லா நிறுவனங்களுமே வெற்றிகரமாக பயணிக்க தொடங்கின. 1954ம் ஆண்டு டிவி. சுந்தரத்தின் மகன்களில் ஒருவரான டி.எஸ்.சந்தானம், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு 1960-களில் லூகாஸ் டிவிஎஸ் மற்றும் பிரேக்ஸ் இந்தியா போன்ற வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களை நிறுவினர்.

டிவிஎஸ் மோட்டார் தொடக்கம்!
1978ல் தான் பிரபலமான இன்றும் மக்கள் மனதில் குடியிருக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது தொடங்கப்பட்டது. 1980ல் இந்தியாவில் முதன் முதலாக இரண்டு இருக்கைகள் கொண்ட டிவிஎஸ் 50 ஓசூர் ஆலையிலிருந்து வெளியானது. அதன் பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய்து வந்த நிறுவனம், 1987ல் ஜப்பானிய நிறுவனமான சுசூகி மோட்டார் கார்பபரேஷனுடன் இணைந்து டிவிஎஸ் சுசூகி உருவாக்கப்பட்டது.

எனினும் 2001ல் சுசூகியில் இருந்து பிரிந்த பிறகு, டிவிஎஸ் மோட்டார் என மறுபெயரிடப்பட்டு, முழுக்க முழுக்க சொந்த தொழில் நுட்பத்துடன் உற்பத்தி செய்யத் தொடங்கியது. வளர்ச்சி மேம்பட மேம்பட அப்பாச்சி மற்றும் ஸ்கூட்டி பெப் போன்ற பல புதிய தலைமுறை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்றைய நிலவரப்படி டிவிஎஸ் குழுமம் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, நிதிச் சேவைகள், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல துறைகளில் இயங்கி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

மூன்றாவது ஏற்றுமதியாளர்!
இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன ஏற்றுமதியாளராகவும் இருந்து வருகிறது. வருடத்திற்கு 3 மில்லியன் வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்து வரும் நிறுவனம், வருடத்திற்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறன் வருடத்திற்கு 4 லட்சத்திற்கும் மேல் ஆகும். 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது வாகனத்தை ஏற்றுமதி செய்து வரும் நிறுவனம், ஆரம்பத்தில் சிறிய ஒரு நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. இது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டே வந்த நிறுவனம், இன்று சர்வதேச நிறுவனங்களில் சிறந்த நிறுவனமாகவும் மாறியுள்ளது.

வெற்றியாளர்களின் தொடக்கம்!
டிவிஎஸ்-ஐ போன்றே நல்லி குப்புசாமி-ன் நல்லி சில்க்ஸ். 1928ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு சிறிய பட்டு சேலைக் கடையாகத் தொடங்கி, இன்று உலகளவில் கிளைகளை கொண்டுள்ளது. இதேபோன்று விஜி பன்னீர்தாஸ், விஜிபி குழுமம். 1950-களில் ஒரு சிறிய ரேடியோ விற்பனை கடையாகத் தொடங்கப்பட்டது. இப்படி இன்று வெற்றியாளர்களாக வலம் வந்து கொண்டுள்ள ஒவ்வொருவரும், ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் தங்களது வணிகத்தை தொடங்கியவர்கள் தான்.

வெற்றிக்கான சூட்சுமங்கள்
ஆரம்ப காலங்களில் சிறிய அளவில் தொடங்கி, இன்று சர்வதேச நாடுகளில் சிறப்பாக வணிகம் செய்யும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கான பொதுவான சூட்சுமங்களை பார்க்கலாம்.

  1. தரத்தில் எந்த சமரசமும் இன்மை. டிவிஎஸ் தொடங்கி நல்லி சில்க்ஸ் வரையில், அவர்களது தரமான பொருட்கள், சேவை மூலமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். இதனால் இன்றளவில் மக்கள் மத்தியில் நம்பகமான பிராண்டுகளாக உள்ளன.
  2. சப்ளை செயின்: பல ஆயிரம் ஜவுளிக் கடைகள் நாட்டில் இருந்தாலும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மீது இன்றும் மக்களுக்கு நம்பிக்கை அதிகம், தரமான, ஏதுவான விலை என அனைத்தும் சாதகமாக பார்க்கின்றனர். அதிலும் பட்டு என்றாலே குறிப்பிட்ட நிறுவனங்கள் நினைவுக்கு வருகின்றன. அதில் ஒன்று தான் நல்லி சில்க்ஸ். இப்படி ஏராளமான நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் உள்ளன.
  3. வாடிக்கையாளர்களுடனான உறவில் கவனம் செலுத்துதல். பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக ஒரே கடையில் தான் ஆடைகள் வாங்குகின்றனர் எனில், அதற்கு முக்கிய காரணம் நீண்ட கால உறவுகள் சிறப்பாக இருப்பது தான். அந்த அளவுக்கு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிராண்ட் மதிப்பை உருவாக்கியுள்ளனர்.
  4. சந்தைப்படுத்துதலில் புதுமை. மக்களின் தேவை அறிந்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தனித்துவமாக பொருட்களை கொடுப்பதில் பல நிறுவனங்களும் பேர் போனவை. இதுவும் அவர்களின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளது.

எந்தவொரு சிறிய நிறுவனமும் நிதி மேலாண்மை, தரத்தில் கவனம் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப செயல்படுதல் உள்ளிட்ட சில அம்சங்களை சரியாக செய்தாலே, உலகளாவிய தலைவராக உயர முடியும் என்பதை மேற்கண்ட பல வெற்றியாளர்களும் நிரூபித்துள்ளனர்.

Share This Article English summary

Business man from Tamil Nadu who started as MSMEs and grew their companies into billion-dollar entities

Many family-owned companies in Tamil Nadu, starting with the TVS Group, started as small businesses and have now grown into billion-dollar companies. Story first published: Sunday, November 9, 2025, 15:05 [IST] Other articles published on Nov 9, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *