பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article
இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.
எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு முதலீடு செய்வதில் தொடங்கி ,வங்கிக் கணக்கு , நம்முடைய சம்பள கணக்கு பங்குச்சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு ,வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது என அனைத்திற்குமே பான் கார்டு கட்டாயமானதாக மாற்றப்பட்டிருக்கிறது .

தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . ஆனால் இந்த நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பலரும் சாமானிய மக்களின் பான் விவரங்களை திருடி மோசடி செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்திருக்கிறது. அதாவது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பான் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கை தொடங்குவது, உங்களுடைய பெயரில் போலியாக கடன் வாங்குவது , சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை நிகழ்த்துகின்றனர்.
பெரும்பாலும் இந்த விவரங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் போது தான் நமக்கே தெரிய வரும். எனவே உங்களுடைய பான் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி சிபில் ஸ்கோர் பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Also Read
உங்க பான் கார்டுல டிசம்பருக்குள்ள இத செய்யலனா சம்பளமே வராம போய்டும் தெரியுமா?
கிரெடிட் ஸ்கோர் வழங்கக்கூடிய சிபில் போன்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் முதலில் லாகின் செய்து கொள்ள வேண்டும். லாகின் செய்த பிறகு உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டும். அதில் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது சந்தேகத்திற்கு இடமான கடன் விண்ணப்பங்கள், வங்கி கணக்கு விண்ணப்பங்கள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என ஒன்றுக்கு பலமுறை பரிசோதனை செய்து பாருங்கள். அவ்வாறு எதுவும் இல்லை என்றால் உங்களுடைய பான் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறது என அர்த்தம் .
Recommended For You
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!!
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதேனும் கடன் விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களுடைய பான் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறது என அர்த்தம். உடனடியாக நீங்கள் இந்த மோசடி குறித்து https://tinpan.proteantech.in/ என்ற தளத்திற்கு சென்று Customer Care என்ற பிரிவில் புகார் பதிவு செய்யலாம்.
Share This Article English summary
How to check whether your PAN card is misusing for fraudulent activities?
There has been a rise in misuse of PAN cards, where due to fraudulent activities, people have lost all their money or identity theft has occurred. Story first published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Other articles published on Nov 8, 2025
