Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

  பர்சனல் பைனான்ஸ்

தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

Personal Finance oi-Devika Manivannan By Published: Saturday, November 8, 2025, 13:35 [IST] Share This Article

இந்தியாவின் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் கையில் ஒரு கணிசமான பணம் சேர்ந்து விட்டாலே உடனடியாக அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு அவசர பணத்தேவை என வரும்போது உடனடியாக அந்த தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

நகை கடன்: இனி நம் அவசரத் பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடகு வைத்து பணமாக பெற முடியும். அதற்கான ஒரு வழிகாட்டுதல்களை தான் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி தந்திருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மக்கள் தங்க கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் தான் பெரிய அளவிலான விளம்பரங்களை கூட வெளியேறுகின்றன. மற்ற தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும்போது நகை கடன்கள் நமக்கு குறைந்த வட்டியிலேயே கிடைக்கின்றன .

தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் - வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

வெள்ளியை அடகு வைத்து கடன்: வங்கிகள் நிதி நிறுவனங்களை பொருத்தவரை நாம் நம்முடைய நகையை அவர்களிடம் அடமானமாக கொடுப்பதால் தனிநபர் கடன்களை காட்டிலும் இந்த வகை கடன்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றாலும் அந்த நகையை அவர்கள் விற்பனை செய்து பணத்தை மீட்டுக் கொள்ள முடியும் என்பது தான் முக்கிய காரணம் . இனி நம்முடைய அவசர பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடமானமாக வைத்து கடன் பெற முடியும்.

ஏப்ரல் முதல் வெள்ளிக்கும் கடன்: ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளிக்கு எதிரான கடன்களுக்கான வழிகாட்டுதல் என்ற பெயரில் சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து நாம் தங்கத்தை போலவே வெள்ளியையும் அடகு வைத்து கடன் வாங்கலாம். வெள்ளி அடகு வைத்து கடன் வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் - வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

வெள்ளி நகை, நாணயங்களுக்கு கடன்: வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை போலவே இனி வெள்ளியையும் அடமானமாக பெற்று கடன் வாங்கலாம். வெள்ளி நகை மற்றும் வெள்ளி நாணயத்தை மட்டுமே அடகு வைக்க முடியும். வெள்ளி கட்டிகளுக்கு கடன் கிடைக்காது. அதே போல வெள்ளி ஈடிஎஃப்கள், வெள்ளி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற டிஜிட்டல் சொத்துக்களை அடமானம் வைக்க முடியாது.

Also Read2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

எவ்வளவு கடன் கிடைக்கும்: வெள்ளி நகைகள் என்றால் 10 கிலோ வரையிலும், வெள்ளி நாணயங்கள் என்றால் 500 கிராம் வரையிலும் அடகு வைத்து கடன் பெறலாம். கடன் மதிப்பு மற்றும் வெள்ளியின் மதிப்புக்கான விதிமுறைகளின் படி பார்த்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரையிலும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 80 சதவீதம் வரையிலும் , 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 75 சதவீதம் வரையிலும் கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

12 மாதங்களில் திரும்ப பெற வேண்டும்: 12 மாதங்களுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்திவிட்டு வெள்ளி நகை மற்றும் நாணயங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை அடகு வைத்தவர்கள் நகையை மீட்க தவறினால் முன் கூட்டியே நோட்டீஸ் அளிக்க வேண்டும், பின்னர் வங்கிகள் அவற்றை ஏலத்தில் விடுத்தால் அதை பற்றியும் கடன் பெற்ற நபருக்கு தெரிவிக்க வேண்டும்.

Recommended For Youபெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!

அவசர தேவைக்கு உதவும் வெள்ளி: தங்க நகை எப்படி அடகு வைக்கிறோமோ அதே போல வெள்ளியை அடகு வைக்கும் போதிலும் அந்த குறிப்பிட்ட வங்கியில் மதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள் வெள்ளியை பரிசோதனை செய்து அதற்கான தொகையை நிர்ணயம் செய்து வழங்குவார்கள் . எனவே வெறும் சொத்து மதிப்பாக மட்டுமே கருதப்பட்டு வந்த வெள்ளி இனி நம்முடைய அவசர தேவைக்கும் உதவப் போகிறது.

வெள்ளியை அடகு வைத்து கடன் வாங்கலாம் என்ற அறிவிப்பு சாதாரண மக்கள் மட்டும் இன்றி சிறு தொழில் நடத்தக்கூடிய நபர்களுக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப தங்கள் கைவசம் இருக்கும் வெள்ளியை அடகு வைத்து பணமாக மாற்றுவதற்கான வாய்ப்பை தந்திருக்கிறது.

Share This Article English summary

Not just gold, here after you can take loan against Silver too: RBI guidelines

Taking loans against silver is easy now, Reserve Bank of India has released new guidelines for lending against silver collateral. These rules will come into effect from April 1, 2026. Story first published: Saturday, November 8, 2025, 13:35 [IST] Other articles published on Nov 8, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *