2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

goldf73-1762584372

  பர்சனல் பைனான்ஸ்

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Personal Finance oi-Devika Manivannan By Published: Saturday, November 8, 2025, 12:19 [IST] Share This Article

உலக அளவிலும் இந்திய அளவிலும் ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை உயர்வால், பலரும் விலை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சத்தில் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதுதான் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தது.

வரலாற்று உச்சம்: சென்னை பொறுத்தவரை ஆபரணத் தங்கம் அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஒரு சவரன் 98,000 ரூபாய் என்ற அளவை நெருங்கியது. அவ்வளவுதான் இனி தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து விடும் என சாதாரண மக்கள் அச்சமடைந்தனர். உலக சந்தையை பார்க்கும் போது முக்கியமான தங்க சந்தையான லண்டன் ஸ்பாட் மார்க்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4381 டாலர்கள் என வரலாற்று உச்சத்தை தொட்டது.

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? இப்போது தங்கம் வாங்கலாமா?

இப்போது சரிவு: தற்போது தங்கத்தின் விலை என்பது தன்னுடைய வரலாற்று உச்சத்தில் இருந்து 10% வரை சரிவை கண்டிருக்கிறது. தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் உயரவில்லை . இரண்டு நாட்கள் சரிவது ஒரு நாள் உயர்வது மீண்டும் சரிவது என ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தான் இருந்து வருகிறது . இந்த சூழலில் விலை குறைவை தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாமா அல்லது லாபத்தை பதிவு செய்து வெளியேறி விடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. முதலில் தங்கம் விலை சரிவுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Also Readபெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!

லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்: நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் மத்தியில் வரை உலக அளவில் தங்கத்தின் விலை 54 சதவீதம் உயர்ந்தது. பல்வேறு நாடுகளின் வங்கிகள் தங்கம் வாங்கியது, புவி சார் பதட்டங்கள், வர்த்தக மோதல்கள், அமெரிக்க பொருளாதார மந்த நிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தங்கம் விலை உயராது என கருதி முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை விற்பனை செய்து அதிலிருந்து லாபம் பார்க்கத் தொடங்கினர் . இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து சர்வதேச சந்தையிலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்தது.

வர்த்தக மோதல், புவிசார் மோதல் தணிந்தது: காஸாவில் ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சீனா இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தை ஆகியவை தங்கத்தில் இருந்து முதலீட்டாளர்களை ஈக்விட்டி சந்தை நோக்கி திரும்ப செய்துள்ளன.

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? இப்போது தங்கம் வாங்கலாமா?

அமெரிக்க வட்டி குறைப்பு: அமெரிக்க மத்திய வங்கி அக்டோபர் மாத இறுதியில் வட்டி வீதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்தது. இருந்தாலும் தங்கம் விலை உயரவில்லை இதற்கு காரணம் அடுத்தடுத்து வட்டி குறைப்பு இருக்காது என்ற ஒரு தகவலை அமெரிக்க மத்திய வங்கி வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலரும் மீண்டும் பத்திரங்களை நோக்கி திரும்பி இருக்கின்றனர் . இது தங்கத்தின் விலையை குறைய செய்து அமெரிக்க டாலரை வலுவடையச் செய்திருக்கிறது.

வங்கிகள் தங்கம் வாங்குவது: வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. குறிப்பாக சீனா , ரஷ்யா உள்ளிட்டவை அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே அதிக தங்கத்தை வாங்குகின்றன. 2025 ஆம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் மத்திய நாடுகளின் வங்கிகள் 220 டன்கள் தங்கத்தை வாங்கி வைத்திருக்கின்றன இது முந்தைய காலாண்டை விட 28% அதிகம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: தங்கத்தின் விலை தன்னுடைய வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவடைந்திருக்கிறது .இந்த சமயத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா? அல்லது மீண்டும் பாய்ச்சல் அடையுமா? என்ற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு குறுகிய காலத்திற்கு தங்கத்தின் விலை இந்த திருத்த நிலையிலேயே இருக்கும் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்து பத்திரங்களில் முதலீடு அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை உயராது .

Recommended For Youஇது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!

ஒருவேளை மீண்டும் புவிசார் பதட்டங்கள் அதிகரிக்கிறது பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடைகின்றன ,அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்கிறது எனும் போது தங்கத்தின் விலை ஏறு முகத்தை நோக்கி திரும்பும் .அடுத்து வரும் மாதங்களில் தங்கத்தின் விலை உயருமா இறங்குமா என்பதை பின்வரும் காரணிகள் தான் முடிவு செய்யப் போகின்றன . பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் போக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பணவீக்க அளவு ,புவிசார பதட்டங்கள், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் .

எப்படி இருந்தாலும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு தங்கம் ஒரு நல்ல முதலீடு வாய்ப்பு தான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . ஏற்கனவே ஒரு கணிசமான லாபத்தை பார்த்து விட்ட நபர்கள் பகுதி அளவு லாபத்தை பதிவு செய்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர் . இல்லை என்னுடைய முதலீடு நீண்ட காலத்திற்கானது எனும் போது இந்த விலை குறைவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கோல்ட் ஈடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்து ஆவரேஜ் செய்யலாம் என கூறுகின்றனர்.

Share This Article English summary

Should you invest in gold now or wait for further reduction? –keys things to note

Gold has seen a sharp correction, falling over 10% since hitting an all-time high in October. This decline has prompted investors about whether it is a buying opportunity or time to book profits? Story first published: Saturday, November 8, 2025, 12:19 [IST] Other articles published on Nov 8, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *