வீக் எண்டில் அதிர்ச்சி !! திடீரென உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 10:20 [IST] Share This Article
சென்னை: ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி வரை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக சரிவடைந்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது 91,000 முதல் 88,000 ரூபாய் என்ற விலைக்குள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது . ஆனால் வார இறுதி நாளான சனிக்கிழமை ஆன இன்று தங்கம் விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து இருக்கிறது . நேற்று சென்னையில் ஒரு கிராம் 11,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 90,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இன்றைய தினம் அதன் விலை 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 90,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 3 – ரூ. 11,350
நவம்பர் 4 – ரூ. 11,250
நவம்பர் 5 – ரூ. 11,180
நவம்பர் 6 – ரூ. 11,320
நவம்பர் 7 – ரூ. 11,270
நவம்பர் 8 – ரூ.11,300
24 கேரட் தங்கத்திலும் இன்று மாற்றம் இருக்கிறது. சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 12,294 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 12,327 ரூபாய் அதாவது கிராமுக்கு 33 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் தங்கம் 98,616 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னையில் இன்று வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 165 ரூபாய்க்கும் , 1 கிலோ 1, 65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
Also Read
பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!
அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டது. இதற்கு சர்வதேச அளவிலான பொருளாதார சூழல்கள் காரணமாக இருந்தன. அமெரிக்கா -சீனா வர்த்தக மோதல், இந்தியா அமெரிக்கா வர்த்தக ரீதியிலான மோதல் மற்றும் இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது .
Recommended For You
இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!
தற்போதைக்கு தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சத்திலிருந்து சவரனுக்கு சுமார் 8000 வரை சரிவில் தான் இருக்கிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து ஒரு நிலையற்ற சூழலிலேயே இருந்து வருகிறது. முதலீட்டாளர்கள் இந்தியா அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்த முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் தங்கத்தின் விலை இதே அளவில் நீடிக்கும் அல்லது குறையும், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் தங்கத்தின் விலை உயரும்.
Share This Article English summary
Gold rate in Chennai increases suddenly: Here is the gold rate
Gold rate in Chennai increases suddenly. One gram of ornamental gold in Chennai is selling for rs,11,300. Here are the details. Story first published: Saturday, November 8, 2025, 10:20 [IST] Other articles published on Nov 8, 2025