8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Share This Article
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து என முன் தேதி இட்டு அரியர் தொகையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணம் வழங்கப்பட்டு விடும்.

சம்பள கமிஷனை பொருத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் என்ற ஒரு காரணியை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ஃபிட்மன்ட் ஃபேக்டர் என நியமனம் செய்யக்கூடிய நம்பரால் பெருக்கி தான் வழங்குகிறார்கள்.
Also Read
8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களே இந்த நம்பர் தான் உங்க தலையெழுத்தையே மாத்த போகுது!!
அப்படி பார்க்கும்போது 8ஆவது சம்பள கமிஷனில் எவ்வளவு ஃபிட்மன்ட் ஃபேக்டர் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் பொருளாதார நிபுணர் ஆர் சண்முகம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 2.5 லிருந்து 3 என்ற அளவுக்கு ஃபிட்மன்ட் ஃபேக்டர் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார். பைனான்சியல் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதி இருக்கக்கூடிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம், உற்பத்தி திறன், அரசின் நிதி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அளவுக்குள் தான் ஃபிட்மன்ட் ஃபேக்டர் நிர்ணயம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார். ஒருவேளை இவர் கூறுவதைப் போல 2.5 என ஃபிட்மண்ட் பேக்டர் கொண்டால் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 35,000 ரூபாயை வாங்கக்கூடிய ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 87 ,500 ரூபாயாக உயரும். ஒரு வேளை 3 என ஃபிட்மன்ட் ஃபேக்டர் கொண்டால் 1,05,000 ரூபாயாக உயர்வு காணும்.
Recommended For You
AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?
சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். எனவே தற்போது அவர்கள் வாங்கும் மொத்த சம்பளத்தில் அவர்களுக்கு 25% வரை உயர்வு கிடைக்கலாம். இருந்தாலும் பல்வேறு புரோக்கரேஜ் நிறுவனங்களும் 2.5 என்பதற்கு கீழாக தான் ஃபிட்மன்ட் ஃபேக்டர் இருக்கும் என கணித்துள்ளன. தற்போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கிறது . 18 மாதங்களுக்குள் இந்த கமிஷன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
Share This Article English summary
8th pay commission: How much salary hike can be expected?
Economist K R Shanmugam predicts that 8th pay commission may fix fitment factor from 2.5 – 3. In that case how much salary hike central government staff can expect? Story first published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Other articles published on Nov 6, 2025