Snapchat உடன் கூட்டணி.. Perplexity அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அதிரடி முடிவு..!!
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, November 6, 2025, 12:34 [IST] Share This Article
எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலை உருவாகிவிட்டது, பிரபல சமூக ஊடக நிறுவனமான ஸ்னாப்சாட், பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனத்துடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ஸ்னாப் பங்கு விலை நீட்டிப்பு வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.
அப்படி என்னப்பா ஒப்பந்தம் இது..? ஸ்னாப் பங்குகள் 25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது. பெர்ப்லெக்ஸிட்டி நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு உதவும்..?

பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனம், ஸ்னாபுக்கு ஒரு ஆண்டில் 400 மில்லியன் டாலர் பணம் மற்றும் பங்குகளாக வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் வருவாய் அடுத்த ஆண்டு முதல் நிறுவனத்தின் முடிவுகளில் பிரதிபலிக்கும்.
2026 முதல் பெர்ப்லெக்ஸிட்டியின் answer-engine ஸ்னாப்சாட்டின் சாட் இண்டர்பேஸ் உடன் இணைக்கப்படும். இது பயனர்களுக்கு விரைவான மற்றும் துல்லியமான தகவல் தேடல் சேவையை வழங்கும். ஸ்னாப் நிறுவனத்தின் தற்போதைய My AI சாட்பாட் சேவையும் தொடர்ந்து கிடைக்கும் என்று ஸ்னாப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்காக பெர்ப்லெக்ஸிட்டி AI நிறுவனம், ஸ்னாப்-க்கு அடுத்த ஒரு ஆண்டில் 400 மில்லியன் டாலர் தொகையை பணம் மற்றும் பங்குகளாக வழங்கும். இந்த ஒப்பந்தத்தின் வருவாய் அடுத்த ஆண்டு முதல் ஸ்னாப் நிறுவனத்தின் நிதியியல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய அளவில் பலன் அளிக்கும், ஸ்னாப் வாடிக்கையாளர்கள் மேம்பட்ட திறன்மிக்க ஒரு ஏஐ தேடல் தளத்தை பெர்ப்லெக்ஸிட்டி வாயிலாக பயன்படுத்த முடியும். இதேநேரத்தில் ஸ்னாப்-ன் 477 மில்லியன் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தும் காரணத்தால் பெர்ப்லெக்ஸிட்டி ஏஐ மாடல் பெரிய அளவில் டிரென்ட் ஆகும், இதேபோல் மக்களின் தேடல் முறைகள் தொடர்பான தரவுகளையும் பெறும். இது காமெட் பிரவுசர்-க்கும் மற்ற சேவைகளுக்கும் பலன் அளிக்கும்.
இதேவேளையில் கூகுள் ஜெமினி ஏஐ, ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் SIRI சாட்பாட் உடன் ஏப்ரல் 2026 முதல் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கூகுள் ஜெமினி மற்றும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்கும்.
மற்ற சமுகவலைத்தளங்களை காட்டிலும் ஸ்னாப்சாட்-ல் பணம் செலுத்தும் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை அதிகம், முந்தைய காலாண்டில் 16 மில்லியனாக இருந்த Paid Subscribers எண்ணிக்கை இக்காலாண்டில் 17 மில்லியனாக உயர்ந்துள்ளது. உலகளாவிய தினசரி செயலில் உள்ள பயனர்கள் (DAUs) 8 சதவீதம் உயர்ந்து 477 மில்லியனை எட்டியுள்ளது. இது இந்நிறுவனத்தின் பயனர் அடித்தளத்தின் வலிமையாக இருப்பதை காட்டுகிறது.
ஆனால் நான்காவது காலாண்டில் DAUs குறைய வாய்ப்பு உள்ளதாக நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளகு. சமீபத்தில் இத்தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வயது சரிபார்ப்பு மற்றும் மாறிவரும் விதிமுறைகள் காரணமாக இது நடக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பெர்ப்லெக்ஸிட்டி AI உடனான ஒப்பந்தம், ஸ்னாப்சாட்டின் சாட் அம்சத்தை மேம்படுத்தி, பயனர் அனுபவத்தை உயர்த்தும். இது நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தில் புதிய பயணத்தை தொடங்குகிறது. ஸ்னாப் நிறுவனத்தின் இந்த முயற்சி, சமூக ஊடகத்தில் AIயை இணைத்து புதிய போக்கை உருவாக்க உள்ளது.
Share This Article English summary
Snapchat Integrates AI Search with $400M Perplexity Deal
Snap Inc shares skyrocketed over 25% in after-hours trading following a $400M one-year partnership with Perplexity AI, integrating its AI answer engine into Snapchat Chat from 2026. Story first published: Thursday, November 6, 2025, 12:34 [IST] Other articles published on Nov 6, 2025