வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 6, 2025, 10:00 [IST] Share This Article
வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பலதுறைகளிலும் சாதனை படைத்து வருகிறது தமிழ்நாடு. மாநிலத்தின் வளர்ச்சி ஒரு மாவட்டத்துடன் நின்றுவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் தொழில்பூங்காக்கள், டைடல் பூங்காக்கள் ஆகியவற்றை அமைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சென்னை தரமணியில் டைடல் பூங்காவை அமைத்தார். இதுதான் தமிழ்நாட்டில் ஐடி துறை வளர்ச்சிக்கான விதையாக அமைந்தது. இந்த டைடல் பூங்காவை மாடலாக கொண்டு தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்தது.

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப துறை வேலைகள் குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்கா மற்றும் மினி டைடல் பூங்காக்களை கட்டமைத்து வருகிறது. இந்த டைடல் பூங்காக்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாகும் இதன் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பொருளாதார ரீதியான வளர்ச்சி அதிகரிக்கும் வேலை வாய்ப்புகளும் பெருகும் என தமிழ்நாடு அரசு நம்புகிறது .
ஏற்கனவே தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, திருப்பூர் ,தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை ,காரைக்குடி ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Also Read
இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!
வேலூரில் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 32 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு மினி டைடல் பூங்காவை அமைத்து திறந்து வைத்திருக்கிறது. தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளோடு இந்த மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மினி டைடல் பூங்கா மூலம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 600 ஐடி நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் . இந்த சூழலில் வேலூர் மினி டைடல் பூங்காவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் என்ற நிறுவனம் முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ளது. பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் நிதி ஆதரவு பெற்ற ஏஜிஎஸ் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு இந்த குத்தகைக்கான ஒப்பந்தத்தையும் முதலமைக்ச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திறப்பு விழாவிலேயே வழங்கினார்.
Recommended For You
AI டேட்டா சென்டர்களும்.. தண்ணீர் பிரச்சினையும்..! உலக நாடுகளில் அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனை..!
வேலூர் மாவட்ட பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா வேலூர் மாவட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு நகர்ப்புற கிராம வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது . இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிகல்லை நாட்டினார்.
Share This Article English summary
AGS Healthcare leases entire Vellore Neo TidelPark, inaugurated by CM Stalin
Blackstone backed AGS Healthcare leased the entire space in Vellore Neo TidelPark which was inaugurated yesterday. This Tidel park has over 60,000 sq. ft. of space and accommodates 600 people. Story first published: Thursday, November 6, 2025, 9:30 [IST]