இது மட்டும் நடந்துச்சுனா தங்கம் விலை மேலும் குறையும் : நிபுணர்கள் கூறும் குட் நியூஸ்..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 8:27 [IST] Share This Article
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் 18ஆம் தேதி வரை தங்கத்தின் விலை சுமார் 50 சதவீதம் உயர்வு கண்டது. இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,32,000 ரூபாய் வரை அதிகரித்தது.
அமெரிக்கா மற்றும் சீனா , அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக மோதல், இந்தியாவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்பட்ட டிமாண்ட், உலக பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடு கருதி பல்வேறு முதலீட்டாளர்களும் தங்கத்தை நோக்கி தங்களுடைய முதலீடுகளை திருப்பி விட்டது, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகம் தங்கத்தை வாங்கியது ஆகியவையே இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் .

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் உலக அளவிலும் இந்திய அளவிலும் தங்கம் விலை சரிந்துள்ளது. டாலரின் மதிப்பு வலுவடைந்தது, முதலீட்டாளர்கள் லாபம் பார்த்தது, இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்தது ஆகியவற்றை காரணமாக கூறலாம். தங்கம் விலை சரிவு இப்படியே நீடிக்குமா அல்லது மீண்டும் தங்கம் விலை உயருமா என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
விடி மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் மேக்ஸ்வெல், அமெரிக்கா , இந்தியா மற்றும் சீனாவுடன் நடத்தும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தான் தங்கத்தின் விலை போக்கை நிர்ணயம் செய்ய போகிறது என கூறுகிறார். அதாவது முதலீட்டாளர்கள் அமெரிக்கா – இந்தியா மற்றும் அமெரிக்கா – சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என தெரிவிக்கிறார்.இந்த இரண்டு நாடுகள் உடனான அமெரிக்காவின் பேச்சு வார்த்தையில் ஏற்பட போகக்கூடிய முன்னேற்றங்கள் தான் தங்கம் விலை மேலும் உயருமா அல்லது சரியுமா என்பதை தீர்மானிக்கும் என கூறுகிறார்.
Also Read
பெரிய வீழ்ச்சி தொடங்கிவிட்டது: தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமே பிழைப்பார்கள்!!
மாஸ்டர் டிரஸ்ட் குழுமத்தின் இயக்குநர் புனீத் சிங்கானியா , டிரம்ப் மற்றும் ஸீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரித்திருக்கிறது, அதே நிலையில் இந்தியா -பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வந்து முதலீட்டாளர்களை பங்குச்சந்தைகள் பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறுகிறார். தங்கம் விலையில் ஒரு குறுகிய காலத்திற்கு ஏற்ற இறக்கத்தை காண முடியும் என்றும் கூறுகிறார்.

ஒருவேளை இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை, அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை ஆகிய இரண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது அல்லது இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தமே ஏற்படவில்லை என்றால் மீண்டும் தங்கத்தின் விலை ஏறும். ஏனெனில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமல் போனால் உலக பொருளாதாரத்திலேயே ஒரு நிலையற்ற தன்மை உண்டாகும் என மேக்ஸ் வெல் சுட்டிக்காட்டுகிறார் .
Recommended For You
AI மிக ஆபத்தானது, மக்களின் வேலைகளை பறித்து எலான் மஸ்கை பணக்காரனாக்கும்: AI காட்ஃபாதர் எச்சரிக்கை
அமெரிக்க மத்திய வங்கி தற்போது ஒரு எச்சரிக்கையான நிலையை தான் எடுத்திருக்கிறது, பொருளாதாரத் தரவுகள் பலவீனமடைந்தால் மேலும் வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என சொல்லப்படுகிறது . அவ்வாறு இருந்தால் டாலர் வலுவிழந்து மேலும் தங்கத்தின் விலை உயரும் என கூறுகிறார். ஒருவேளை அமெரிக்காவுக்கு இந்தியா மற்றும் சீனா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பழையபடி சந்தைகளை நோக்கித் திரும்புவார்கள், இதனால் உலகளவில் தங்கத்தின் விலை குறையும் இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார். எனவே தங்கத்தின் விலை போக்கை அடுத்த சில வாரங்களில் நடக்கும் நிகழ்வுகளே தீர்மானிக்க போகின்றன.
Share This Article English summary
Will Gold price reduce after India – US trade deals? – Here is what is going to happen?
Analysts predicts the gold prices may shift their momentum after the results of trade negotiations between the US and India, and US–China trade talks. Story first published: Thursday, November 6, 2025, 8:27 [IST] Other articles published on Nov 6, 2025