8ஆவது சம்பள கமிஷனுக்கு முன்னரே உயரப் போகும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 12:42 [IST] Share This Article
சம்பள கமிஷன் வழங்கக்கூடிய பரிந்துரை அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சம்பள கமிஷன் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது . அதன்படி அரசு ஊழியர்களின் சம்பளமும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.
சம்பள கமிஷன் அமைத்து புதிய சம்பளம் நடைமுறைக்கு வந்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி என்பதை வழங்குகிறது. இது அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். சம்பள கமிஷன் தொடங்கும் போது இந்த அகவிலைப்படி பூஜ்ஜியமாகவும் அதனை அடுத்து 2%, 3% என படிப்படியாகவும் உயர்த்தப்படும் .

தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது இத்துடன் 58% அகவிலைப்படி கிடைக்கிறது. அதாவது ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய் என வைத்துக்கொண்டால் அந்த 50,000 ரூபாய் சேர்த்து அகவிலைப்படியாக 29,000 ரூபாய் என மொத்தம் 79,000 ரூபாய் அவருடைய கைக்கு சம்பளமாக தற்போது கிடைக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் ஜனவரி ஒன்றிலிருந்து சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது தாமதம் ஆகிவிட்டது என்பதால் புதிய சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் வரை தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு என்பது அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். அந்த அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வு கிடைக்கப் போகிறது.
அனைத்து இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான சதவீதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படியும், ஜூலையில் 3% அகவிலைப்படியும் கிடைத்தது.
Also Read
பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!
கடந்த ஆண்டில் மொத்தம் 5% அகவிலைப்படி உயர்வு கிடைத்தது. இந்த ஆண்டும் அதுவே பின்பற்றப்பட்டால் ஜனவரியில் இருந்து 2% அகவிலைப்படி உயரும், அப்படி என்றால் அகவிலைப்படி 60%ஆக மாறும். எனவே 50,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்டவருக்கு அத்துடன் சேர்த்து 30,000 ரூபாய் அகவிலைப்படியாகவும், கைக்கு வரும் மொத்த சம்பளம் 80,000 ரூபாயாகவும் கிடைக்கும். இந்த ஆண்டு ஜூலையில் 3% என உயர்ந்தால் அகவிலைப்படியே 63% என்றும் மொத்த சம்பளம் 81,500 ரூபாய் என்றும் அதிகரிக்கும்.
Recommended For You
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?
எனவே சம்பள கமிஷன் தாமதமானாலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்ற நிவாரணம் தொடர்ந்து கிடைக்கத்தான் போகிறது. 8ஆவது சம்பள கமிஷ்ன் நடைமுறைக்கு வருவதற்குள் 10% வரை அகவிலைப்படி உயர்ந்து 68% ஆக மாறலாம். இது தவிர சம்பள கமிஷன் தாமதமானதற்கான அரியர் தொகையும் கிடைக்கும்.
Share This Article English summary
DA Hike Debate: 2% Increase for Central Government Employees ?
Central government employees’ dearness allowance (DA), currently at 58%, faces a semi-annual revision in January 2026, with November 2025 AICPI-IW data suggesting a potential 2% or 3% hike. Story first published: Monday, January 5, 2026, 12:42 [IST] Other articles published on Jan 5, 2026
