5 வருடத்தில் 2000% லாபம்! முதலீட்டாளர்களை கோடீஸ்வரராக்கிய டிஃபென்ஸ் பங்கு!ரூ.419 கோடி புதிய ஆர்டர்!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 31, 2025, 16:17 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தையில் டிஃபென்ஸ் துறை பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் (Apollo Micro Systems) பக்கம் திரும்பியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கும்.
இன்று மட்டுமல்ல இன்னும் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, மஹா ரத்னா பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா (Coal India) இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ள 419.39 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஆர்டர், இந்தப் பங்கை மீண்டும் 5% அப்பர் சர்க்யூட் ஆக வைத்துள்ளது. ஏற்கனவே மல்டிபேக்கர் அந்தஸ்தைப் பெற்ற இந்தப் பங்கு, இந்த புதிய ஆர்டருக்கு பிறகு 2026ல் இன்னும் புதிய உச்சங்களைத் தொடுமா? முதலீட்டாளர்கள் ஏன் இந்தப் பங்கை இவ்வளவு ஆர்வமாக துரத்துகிறார்கள்? தொடர்ந்து இப்பங்கானது ஏற்றம் காணுமா, வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

மிகப்பெரிய ஆர்டர்!
அப்போலோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐடிஎல் எக்ஸ்ப்ளோசிவ் (IDL Explosives) நிறுவனத்திற்கு, கோல் இந்தியா நிறுவனமானது 419.39 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது. இந்த வெடி பொருட்களுக்கான ஆர்டர் அறிவிப்பை அடுத்து தான் அப்போலோ பங்கானது 5% அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது. இதனுடன் இந்த நிறுவனம் கார்ட்ரிட்ஜ் வெடி பொருட்களை வழங்குவதற்கான 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டரும் கிடைத்துள்ளது. மேற்கண்ட இரு ஆர்டர்களையும் சேர்த்து அப்போலோ நிறுவனத்தின் வசம் 420.89 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரானது உள்ளது.
இதோடு கடந்த வாரம் நிறுவனமானது 100.25 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்டர்களானது ஏற்கனவே உள்ள வலுவான செயல்பாடுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவில் மொத்த ஆர்டர் மதிப்பானது 7,850 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வளவு பெரிய ஆர்டர்கள் கைவசம் இருப்பது மேற்கொண்டு, வரும் காலாண்டுகளில் வருவாய் மற்றும் லாபத்தை நிலையாக வைத்திருக்க உதவும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிதி நிலவரத்தை பார்க்கும்போது இரண்டாவது காலாண்டில் வருவாய் வளர்ச்சியானது 40% அதிகரித்து, 2,253 கோடி ரூபாயாகவும், லாபம் 91% அதிகரித்து, 300 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் பங்கு நிலவரம்?
அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் பங்கு விலையானது கிட்டத்தட்ட 5% அதிகரித்து, 271.9 5 ரூபாயாக காணப்படுகிறது. இது இன்று காலை வர்த்தக நேரத்தில் 5% வரை அதிகரித்து 272.50 ரூபாயாகவும் உச்சம் எட்டியது. தொடர்ந்து கடந்த ஆறு வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வரும் பங்கானது, நடப்பு ஆண்டில் இதுவரையில் 124% ஏற்றமும், 1 வருடத்தில் 134% ஏற்றத்திலும், 5 வருடத்தில் 2079% ஏற்றத்திலும் காணப்படுகிறது. தொடர்ந்து வலுவான ஆர்டர்கள், நிதி நிலவரம், டெக்னிக்கலாகவும் ஏற்றம் காணலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why did this defence stock jump 5% after delivering 2,000% returns in five years?
Apollo Micro Systems delivered over 2,000% returns in five years. The stock surged 5% after securing a Rs 419-crore order from Coal India. Story first published: Wednesday, December 31, 2025, 16:17 [IST] Other articles published on Dec 31, 2025
